Pushpa 2 Actress First Choice Before Rashmika Mandanna : இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படமாக இருக்கிறது, புஷ்பா 2 : தி ரூல். இந்த படத்தின் முதல் பாகம், புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் 2021ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இப்படம் குறித்த விவரங்களையும், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த விவரங்களையும் இங்கு பார்ப்போம்.
புஷ்பா 2:
புஷ்பா படத்தில், சந்தன மரக்கட்டைகளை கடத்தும் தொழில் குறித்தும், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போலீஸ் வில்லன் குறித்த கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில், எடுபிடியாக இருந்து, கடத்தலுக்கு ஐடியாக கொடுக்கும் வரை வளரும் நாயகன் புஷ்பா, இரண்டாம் பாகத்தில் கடத்தல் டான்-ஆகவே மாறுகிறார். புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களையும் சுகுமார் இயக்கியிருக்கிறார். 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில், ஹீரோவாக நடித்திருப்பது அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா, வில்லன் பகத் பாசில் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த கதாப்பாத்திரங்களில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
ராஷ்மிகாவிற்கு பதில் 37 வயது நடிகை!!
தென்னிந்திய திரையுலகில், பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வரும் சமந்தாதான் அந்த நாயகி. புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்க, முதலில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனால், 2018ஆம் ஆண்டிற்கு பிறகு கிராமத்து கதாப்பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திய சமந்தா, ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்க மறுத்தாராம். இதையடுத்து, அந்த வாய்ப்பு ராஷ்மிகாவிற்கு சென்றிருக்கிறது.
சமந்தாவை படத்தில் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்று நினைத்த இயக்குநர், இவரை “ஊ அண்டாவா” பாடலுக்கு நடனமாட வைத்தார். கடைசியில், இந்த பாடல் படத்திற்கு பெரிய ஹிட் ஆக அமைந்து விட்டது.
மேலும் படிக்க | Pushpa 2 : பெண் உயிரை காவு வாங்கிய புஷ்பா 2 படம்! ஒன்றுமே சொல்லாத அல்லு அர்ஜுன்..
முதலில் நடிக்க இருந்த ஹீரோ:
ராஷ்மிகா மட்டுமல்ல, அல்லு அர்ஜுனும் புஷ்பா படத்திற்கு முதலில் தேர்வான நடிகர் கிடையாது. இதில் ஹீரோவாக நடிக்க முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது, மகேஷ் பாபுவிடம்தானாம். ஆனால், கொஞ்சம் வில்லத்தனமான ரோலில் நடிக்க மகேஷ் பாபு தயங்கியதால் அல்லு அர்ஜுனிடம் அந்த வாய்ப்பு சென்றிருக்கிறது. இதையடுத்து, அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் பொருந்திப்போக, அவர் சமீபத்தில் அப்படத்திற்காக தேசிய விருதே பெற்று விட்டார்.
முதலில் வில்லனாக நடிக்க இருந்தவர்..
புஷ்பா படத்தில், மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். முதல் பாகத்தில், இவருக்கு சில நிமிட காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாம் பாதி முழுவதும் இவர்தான் படத்தில் வில்லனாக டிராவல் செய்கிறார். இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது, நம் தமிழ் நடிகர் விஜய் சேதுபதிதானாம். ஆனால், புஷ்பா படத்தின் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாததால், இவரால் அப்படத்தில நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா வாங்கிய சம்பள விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ