அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பா? நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

Updated: Oct 4, 2017, 03:21 PM IST
அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பா? நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

இன்று நடிகர் கமல்ஹாசன், தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தின் நற்பணி மன்றத்திலிருந்து தலா 2 பேர் கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பு கமால் சாருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பாகும். இந்த சந்திப்பு ஒரு சில நாட்களுக்குத் தொடரும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தற்போது செய்து வரும் நற்பணி மன்றபணிகளை விரிவுபடுத்தும் படி படி கூறினார் என பெயர் வெளியிட விரும்பாத நற்பணி மன்ற நிர்வாகி தெரிவித்தார்.

முன்னதாக, அரசியல் பணிகளைத் தொடங்கிவிட்டதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில், நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தொடர்ந்து சில நாட்கள் ஆலோசனை நடக்க இருப்பதால், வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருவதால், அன்று அரசியலை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.