AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா?

AR Rahman Net Worth and Salary: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 57வது பிறந்தநாள். இதையடுத்து அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Written by - Yuvashree | Last Updated : Jan 6, 2024, 11:21 AM IST
  • இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்.
  • இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • மொத்த சொத்து மதிப்பு வாய் பிளக்க வைக்கிறது.
AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா? title=

கடல் போன்ற ரசிகர் கூட்டத்தை கொண்ட இசை கலைஞர்களுள் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் நாயகன், சிறந்த பாடகர், இசை மேதை என்றெல்லாம் இவருக்கு பல பெயர்களை கொடுத்தாலும், அடிப்படையில் இவர் ஒரு சிறந்த மனிதர் என்பதைத்தான் இவருடன் பழகிய அனைத்து பிரபலங்களுமே அடிக்கோடிட்டு காட்டுகின்றனர். இப்படி, ரசிகர்களையே தன் சொத்தாக சேர்த்து வைத்திருக்கு இசைபுயலிற்கு இருக்கும் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? (A. R.Rahman Net Worth)

இத்தனை கோடி சொத்தா…

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகின் ஜாம்பவான் இசைக்கலைஞராக திகழும் ரஹ்மான், பல கோடிகளை சம்பாதித்திருப்பார் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்திய இசையுலகின ‘டாப்’ நட்சத்திரமாக இருந்தாலும், இவர் தான் இசையமைக்கும் படத்தை பொறுத்து தன் சம்பளத்தை ஒரு சில படங்களுக்காக குறைத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை, ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் (AR Rahman Salary Per Movie). படங்கள் மட்டுமன்றி இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு இசை பள்ளி-கல்லூரிகளும் உள்ளது. இதையனைத்தையும் வைத்து, இவருக்கு மாத வருமானம் மட்டும், ரூ.4 கோடியாக உள்ளதாம். ஆண்டு வருமானம், ரூ.50 கோடியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது (AR Rahman Annual Salary). 

வீடு, கார், பங்களா..

ஏ.ஆர்.ரஹ்மானிற்கு சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சொந்தமாக சொகுசு வீடுகளும் உள்ளதாம். அது மட்டுமன்றி, அவர் படம் எடுத்த சமயத்தில் தனக்கென ஒரு ஸ்டுடியோவையும் சென்னையில் கட்டினார். சமீபத்தில் துபாயில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் ரஹ்மான் தொடங்கினார். இதன் மதிப்பு மட்டும் பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவை தாண்டி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலும் இவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது (AR Rahman Assets). 

AR Rahman

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

ஏ.ஆர்.ரஹ்மான் சொந்தமாக ஜாகுவார், மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ போன்ற சொகுசு கார்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் (Cars owned by AR Rahman). ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே பணக்கார இசையமைப்பாளர், நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்று கூறப்படுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் 650 கோடி முதல் 700 கோடிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது (AR Rahman Total Net Worth). 

வளர்ச்சியும் எழுச்சியும்..

ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பத்தை ‘இசைக்குடும்பம்’ என்றே கூறலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர், ஏ.எஸ். திலீப் குமார். பின்னாளில் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, பெயரையும் மாற்றிக்கொண்டார். இவரது திறமையை வெளிக்கொணர்ந்தது, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வண்டர் பலூன்” என்ற நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில், இவர் மிக சிறு வயதிலேயே ஒரே சமயத்தில் 4 கீ-போர்டுகளை வாசித்து பல லட்சம் மக்களை கவர்ந்தார். அடுத்து, இவருக்கு பெரிய மேடை ஏறுவதற்கு வழிவகுத்து கொடுத்தவர், ‘மணிரத்னம்’.  அவர் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலமாகத்தான் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

AR Rahman

ரஹ்மான்-மணிரத்னம் கூட்டணி, வெற்றிக்கூட்டணியாக அமைய, அவர்கள் கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்2’ திரைப்படம் வரை ஒன்றாக பயணித்தனர். “நான் இதை செய்தேன், அதை செய்தேன்” என அலட்டிக்கொள்ளாத, தற்பெருமை கொள்ளாத மனிதர்களுள் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை செல்லக்காரணம், இவரது அந்த அடக்க குணம் என்றே பலர் கூறுவர். கலை-இசை உலகின் ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வனாதன், பாடலாசிரியர் வாலி, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என பலருக்கு ரஹ்மான்தான் ஃபேவரட். அவர் மீது வைத்துள்ள அன்பை, முத்தமழையாக பொழிந்து அவர்களே பல முறை மேடையில் காட்டியுள்ளனர். 

ஆஸ்கர் நாயகன்..

ரஹ்மான், அப்போது கோலிவுட்-பாலிவுட் படங்களில் இசையமைத்து உச்ச இசையமைப்பாளராக இருந்த தருணம் அது. 2009ஆம் ஆண்டில், ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் ‘ஜெய் ஹோ’ என்ற பாடலை இசையமைத்திருந்தார். இந்த பாடலை நம் மண்டைக்குள் ஒலித்தாலே, கையில் மயிற்கூச்சரியும். அந்த அளவிற்கு வலுவான, சக்திவாய்ந்த இசையை இப்பாலில் மெட்டு கட்டியிருப்பார், ரஹ்மான். இந்த பாடல் இந்தி மொழியில் அமைக்கப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியுணர்வு பீரிட்டு அடிக்கும். அதற்கு காரணம், ரஹ்மானின் இசையே. இதனாலேயே இப்பாடலுக்கும், இப்படத்திற்கும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் ((AR Rahman Oscar), ஏ.ஆர்.ரஹ்மான். 

இன்று பிறந்தநாள்..

எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்து பெரும் புகழ் பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜனவரி 6) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் (AR Rahman Birthday). இவரது மகன் அமீனுக்கும் இன்றுதான் பிறந்தநாள் (A. R. Ameen Birthday). இசையால் உலகை வென்ற இசைப்புயலுக்கு (Isai Puyal Birthday) ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | அப்பப்பா..தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News