Ananya Pandey: 'அவ்வளவு கஷ்டமா இருந்தா தவிர்க்கலாமே'; ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!!

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தனது அடுத்த படமான 'கெஹ்ரையன்' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், சமீபத்தில், இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது, ​​அனன்யா சிவப்பு நிற குட்டையான உடையில் தோன்றினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2022, 11:19 AM IST
Ananya Pandey: 'அவ்வளவு கஷ்டமா இருந்தா தவிர்க்கலாமே'; ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!! title=

Ananya Pandey Troll: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தனது அடுத்த படமான 'கெஹ்ரையன்' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், சமீபத்தில், இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது, ​​அனன்யா சிவப்பு நிற குட்டையான உடையில் தோன்றினார். அவர் அதில் அழகாகத்தான் இருந்தார். ஆனால், அனன்யாவின் இந்த ஸ்டைல் ​​ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை, ஏனென்றால், அவர் குட்டையான மினி ட்ரஸ் அணிந்த அவர், இயல்பாக, இல்லாமல் தர்மசங்கடமாக உணர்வது போல் காணப்பட்டார். 

இதனால், சமூக ஊடகத்தில் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். 'கஹ்ரியான்' படத்தின் புரமோஷனுக்காக அனன்யா குட்டையான ஆடையை அணிந்து, நடக்கவே சிரமப்பட்ட நிலையில், பலர் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ALSO READ | Instagram ரீல்ஸை கலக்கும் 'ஓ மை மாஸ்டர்' - யூடியூபில் 2 மில்லியன் பார்வை

அதில் ஒரு பயனர், அத்தகைய குட்டையான ஆடைகளை அணிவதில் இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, ​​​​நீங்கள் ஏன் அதை அணிய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளால் அனன்யாவை துளைத்து எடுத்து வருகின்றனர். 

இந்த மினி டிரஸ்ஸில் அனன்யா பாண்டே மிகவும் அழகாக இருந்தார் என்றலும், குட்டை ஆடை அவருக்கு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. அனன்யாவை ட்ரோல் செய்த, ஒரு பயனர், ‘ உங்கள் டிரஸ்ஸிங் சென்ஸ் மோசமடைந்து வருகிறது. அப்படி அசௌகரியமாக நடப்பதை விட உங்களுக்கு பொருத்தமான ஆடைகளை அனிவது நல்லது என பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, அனன்யா கடுமையான குளிரில் க்ராப் டாப் அணிந்து வெளியே சென்றுள்ளார், பலத்த காற்று வீசியதால், குளிர் அதிகமாக இருந்த நிலையில், ​​சித்தந்த் சதுர்வேதி தனது ஜாக்கெட்டை கழற்றி அவளுக்கு அணிவித்தார். இதற்காகவும் அவர் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

அனன்யா அடுத்தாக தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் தைரிய கர்வா ஆகியோருடன் 'கஹ்ரேயன்' படத்தில் நடிக்கிறார். ஷகுன் பத்ரா இயக்கிய இந்தப் படம், OTT தளமான Amazon Prime வீடியோவில் பிப்ரவரி 11, 2022 அன்று வெளியிடப்படும். 'கெரையான்' படத்தில் நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ், வயாகாம் 18 மற்றும் ஷகுன் பத்ராவின் ஜாவ்ஸ்கா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ALSO READ | வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ், வைரலாகும் போட்டோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News