டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் அதிர்ச்சி

ஸ்விக்கி உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 24, 2021, 10:10 AM IST
டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் அதிர்ச்சி

நிவேதா பெத்துராஜ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். தற்போது நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj) கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ALSO READ | விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகும் FIR!

அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில்.,

 

 

ஸ்விக்கி (Swiggy) உணவக செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ் ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.

ALSO READ | Swiggy: இனி டெலிவரி பாய் அல்ல; ட்ரோன்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News