விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகும் FIR!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் முதல்பார்வை புகைப்படம் வெளியாகியுள்ளது!

Updated: Jul 17, 2019, 02:04 PM IST
விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகும் FIR!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் முதல்பார்வை புகைப்படம் வெளியாகியுள்ளது!

கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களிடன் இணை இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். FIR (பைசல் இப்ராஹிம் ரைஸை) என பெயரிடப்பட்டு இந்த படத்தின் முதல் பார்வை புகைப்படத்தில் விஷ்னு விஷால், கருப்பு துணியால் முகத்தை பகுதியளவு மறைத்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளார். மேலும் இவருக்கு பின்னால் செய்திதாள்களின் துண்டுகள், துப்பாக்கி, பாலைவனம் என தீவிரவாத கும்பள் போன்றதொரு பிம்பத்தை வெளிக்காட்டியுள்ளது.

இந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மனு ஆனந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகனின் இணை நடிப்பில் வெளியாகும் முதல் படம் ஆகும். இந்த படத்திற்கு N அஸ்வந்த் இசையமைக்கின்றார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்ய, கிருமி புகழ் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கின்றார். 

விஷ்ணு தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடும் விஷ்னு விஷால், கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்தார், தற்போது இயக்குனர் எழிலின் இயக்கத்தில் ‘ஜகஜலா கில்லாடி’ திரைப்படத்தில்  நிவேதா பெதுராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். தொடர்ந்து விஜய் சேதுபதி எழுதி சஞ்சீவ் இயக்க விக்ராந்த் உடன் VV18 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த பிஸி செடியூல்களுக்கு மத்தியில் தற்போது கேரள கனவு கன்னி மஞ்சிமா மோகன் ஜோடியில் தற்போது FIR படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.