விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 15, 2022, 11:48 AM IST
  • விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
  • அதற்கு முன்பு மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
  • தற்போது ஷாருக்கான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்! title=

'மக்கள் செல்வன்' என்று தமிழ் திரையுலக ரசிகர்களால் போற்றப்படும் விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.  இவர் பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடிப்பவர், நேர்மறையான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி எதிர்மறையான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்ததை விடவும், வில்லனாக நடித்திருந்தது ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது.  இவர் இதுவரை  'பேட்ட' படத்தில்  ரஜினிகாந்திற்கு வில்லனாகவும், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் வெளியான 'உபென்னா' படத்தில் வில்லனாகவும், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் அதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து பல மொழி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனின் 'புஷ்பா-2' படத்திலும், நந்தமுரி பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பல செய்திகள் இணையத்தில் உள்ள வந்து கொண்டிருக்கின்றன.  மேலும் இந்த மூன்று படங்களுக்காகவும் அவர் ரூ.80 கோடி சம்பளமாக பெற்றுக்கொண்டதாகவும் சில வதந்திகள் வெளியானது.

மேலும் படிக்க | தேடி வந்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு! நிராகரித்த சிம்பு! காரணம் என்ன?

இந்நிலையில் விஜய்சேதுபதியின் பிஆர்ஓ யுவராஜ் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், 'விஜய்சேதுபதி சார் இப்போது ஷாருக்கான் சாரின் ஜவான் படத்தில் மட்டும் தான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வேறு எந்த தெலுங்கு படத்திலும் அவர் நெகட்டிவ் ரோலில் தற்போது ஒப்பந்தமாகவில்லை' என்று தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் 'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது, அட்லீ இயக்கும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு  நயன்தாரா நடிக்கிறார்.

 

மேலும் படிக்க | பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News