இணையத்தில் வைரலாகும் சண்டக்கோழி-2 குழுவினர் Video!

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின் வெற்றியினை சண்டக்கோழி-2 படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Updated: Jun 24, 2018, 05:14 PM IST
இணையத்தில் வைரலாகும் சண்டக்கோழி-2 குழுவினர் Video!
Screengrab

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின் வெற்றியினை சண்டக்கோழி-2 படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் மற்றும் விஷால், அர்ஜூன் நடிப்பில் வெளியான இரும்புதிரை ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து இந்த இரண்டு படங்களின் வெற்றியை சண்டகோழி 2 திரைப்படக் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் திரைப்படமானது கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிப்பில் உறுவாகி கடந்த மே 9-ஆம் நாள் வெளியானது.

விஷால் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில், இணையத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிய திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் கடந்த மே 10-ஆம் நாள் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்த விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சண்டக்கோழி 2 திரைப்படம் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் நடிகையர் திலகம் மற்றும் இரும்புத்திரை படங்களின் வெற்றியினை தற்போது சண்டக்கோழி 2 குழுவனிர் தங்களது படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.