GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது, அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள்.
ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார் அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைக்கிறார். அவர் பல வலிகளுடன் தான் இங்கு இருக்கிறார். அவருக்கு இந்தப்படம் வெற்றியைத் தரட்டும். இனிமேல் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன், இந்தப்படம் நல்ல இடத்தைச் சென்றடைய வேண்டும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகை கனிகா மான் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம், இங்கு இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி. விஜய் சத்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்கிறேன். இந்தப்படம் பார்த்தேன் மிக அருமையாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எல்லோருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். அம்ரீஷ் என் பிள்ளைகளில் ஒருவன், இன்னும் அவன் பெரிய ஆளாக வருவார். நாயகி ரெண்டு பேர் வரவில்லை, என்கிறார்கள் பேக்கப் பண்ணிய ஹீரோயினை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள், இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இதோ அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை வந்திருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள். என் நண்பன் திருமலை மனக்கஷ்டத்தில் எல்லாவற்றையும் கொட்டி விட்டார். ஒரு தயாரிப்பாளருக்கு நன்றி மறந்தவனை நடிக்க வைக்காதீர்கள். இந்தப்படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட டிரெய்லரே மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா ஒரு ஆணழகன், தமிழ்மகன் நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்போது வரும் நடிகர்களுக்கு வரும் போதே எம் ஜி ஆர் ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது. சத்யா நன்றாக உழைத்து, இன்னும் நல்ல படங்கள் செய், நல்ல நடிகனாக என் வாழ்த்துக்கள்.
நடிகர் விஜய் சத்யா பேசியதாவது, எல்லோரும் எங்களை மதித்து என் விழாவிற்கு வந்துள்ளீர்கள், நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் சூப்பராக இந்தப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்யுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க - ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ