தக் லைஃப் படத்தில் இணைந்து கமலுடன் நடிக்கும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஒரு புதிய நடிகர் இணைந்து நடிக்க உள்ளார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 3, 2023, 08:32 PM IST
  • கமலின் 234வது படம், தக் லைஃப்
  • இதில் முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
  • அவர் யார் தெரியுமா?
தக் லைஃப் படத்தில் இணைந்து கமலுடன் நடிக்கும் பிரபல நடிகர்! யார் தெரியுமா? title=

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் ஒரு புதிய நடிகர் இணைந்துள்ளார்.

தக் லைஃப் திரைப்படம்..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்-மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம், Thug Life. கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில சில வாரங்களுக்கு முன்னர் வெளியனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

படக்குழு..

தக் லைஃப் படத்தில் கமலுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர், த்ரிஷா. இவர், ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள இன்னொரு முக்கிய நடிகர், ஜெயம் ரவி. முன்னர் சார்மிங் கதாநாயகனாக வலம் வந்த இவர், கடந்த சில வருடங்களாக ஜனரஞ்சகமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரும் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

மணிரத்னமுடன் ஏற்கனவே கைக்கோர்த்த நடிகர்களைத்தான் தக் லைஃப் படத்தில் நடிக்க வைக்கவும் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி அவர் செலக்ட் செய்த நடிகர்களுள் ஒருவர், துல்கர் சல்மான். நடிகர் மம்மூட்டியின் மகனான இவர், ஓகே கண்மணி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.  இவரும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் படிக்க | நடிகர் பப்லுவை பிரிந்த இளம் காதலி .. பிரேக் அப் குறித்து அவரே கொடுத்த ஹின்ட்!

 

கமலுடன் இணையும் இன்னொரு முக்கிய நடிகர்..

தக் லைஃப் படத்தில் வாரிசு நடிகர் ஒருவர் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 80களில் முன்னணி நடிகராக விளங்கிய கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்தான் அந்த நடிகர். இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது கதாப்பாத்திரம், தக் லைஃப் படத்தில் பெரிதாக பேசப்படும் என கூறப்படுகிறது. கெளதமின் தந்தையை வைத்து மணிரத்னம் ஏற்கனவே சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? 

தக் லைஃப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது. 

தக் லைஃப் என்றால் என்ன? 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்கள் தக்குகள்தான் எனவும் 'பிண்டாரிகள்' எனவும்  ஆங்கில அரசின் ஆவணங்கள் குறிக்கின்றனர். இவர்களை கூண்டோடு அழிக்க முடிவெடுத்த ஆங்கிலேய அரசு, பலரை சிறை பிடித்து, 2,000த்திற்கும் மேற்பட்டோரை கொன்றது. இந்த வரலாற்றை மையமாக வைத்து, கமலின் Thug Life படத்தின் கதை எழுதப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மாமன்னன் முதல் விடுதலை வரை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News