'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த ஒரு படத்தில் நடிக்கப்போவதாக முன்னர் சில தகவல்கள் வெளியானது.  

Written by - RK Spark | Last Updated : May 24, 2022, 02:41 PM IST
  • விக்ரம் படம் ஜீன் 3ம் தேதி வெளியாக உள்ளது.
  • கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
  • மேலும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
'விக்ரம்' படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? வெளியான தகவல்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படமான விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகிக்கொண்டே வருகிறது.  படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் பற்றிய பல முக்கியமான தகவல்களும் வெளியாகி வருகின்றன.  இந்த மெகா ஆக்ஷன் த்ரில்லர் படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில்  பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் நல்ல வரவேற்பை, கமலே எழுதி, பாடிய இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியாக அமைந்தது.  மேலும் கடந்த 2020-ல் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.  'தலைவர் 169' படமானது, விஜய்யின் மாஸ்டர் படம் வெளியானவுடன் வெளியாகும் என்று கூறப்பட்டது.  பின்னர் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக விஜய்யின் மாஸ்டர் படம் தாமதமாக வெளியானது.  மேலும் கமல் மற்றும் ரஜினி ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதும் ஏமாற்றத்தை அளித்தது.  அதனையடுத்து 'தலைவர் 169' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

Nelson

சமீபத்திய பேட்டி ஒன்றில், விக்ரம் படத்தின் கதை ரஜினிக்காக தான் உருவாக்கப்பட்டதா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்தவர், ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதை முற்றிலும் மாறுபட்டது, மேலும் இது கமலின் மனதில் நீண்ட நாட்களாக தோன்றிய கதை, அதனால் இது கமலுக்கான கதை தான் என்று இயக்குனர் லோகேஷ் தெளிவுபடுத்தி இருக்கிறார்.  கோவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திட்டம் எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லேட்டஸ்ட் சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி சேரும் கார்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News