ஜென்டில்மேன் 2 ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டாரா? கோலிவுட் கிசுகிசு

ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2022, 03:09 PM IST
  • ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் புதிய அப்டேட்
  • லேடி சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக தகவல்
  • மெகா கூட்டணி உருவாவதால் எகிறும் எதிர்பார்ப்பு
ஜென்டில்மேன் 2 ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டாரா? கோலிவுட் கிசுகிசு title=

வெற்றி பெற்ற படங்களின் பார்ட் 2 ரிலீஸாவது தமிழ் சினிமாவின் டிரெண்டாக உள்ளது. அந்தவரிசையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ’ஜென்டில்மேன்’. தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோகன் தயாரிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜென்டில்மேன். பிரம்மாண்ட இயக்குநராக இப்போது இருக்கும் சங்கரின் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் அப்போது மெகாஹிட் அடித்தது.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தின் மெயின் வில்லன் இவரா? ஏகபோக மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு ஸ்டார் அந்தஸ்தையும் இப்படம் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில், இப்படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோகன். இதற்கான அறிவிப்பை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட அவர், ஜென்டில்மேன் 2 படதிற்கான இசையமைப்பாளர் யார்? என்பதை சரியாக கூறுபவர்களுக்கு தங்கக்காசு பரிசு என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். 

இசையமைப்பாளர் யாராக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீராவாணியை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஜென்டில்மேன் 2 தயாராக உள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக லேட்டஸ்டாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. உண்மையாக இருக்குமா?. 

மேலும் படிக்க | இதனால் தான் 83 திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக தாமதமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News