சந்தியா வாங்கிய சத்தியம்.. ரகுராமால் அதிர்ச்சியான ஜானகி - சந்தியா ராகம்

சந்தியா வாங்கிய சத்தியம்.. ரகுராமால்  அதிர்ச்சியான ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2023, 01:29 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சந்தியா ராகம்.
  • இனி நடக்க இருப்பது என்ன? இங்கே பார்ப்போம்.
சந்தியா வாங்கிய சத்தியம்.. ரகுராமால்  அதிர்ச்சியான ஜானகி - சந்தியா ராகம்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்தியா தனக்கு கேன்சர் இருக்கும் விஷயத்தை சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பித்துள்ள தொடர், சந்தியா ராகம். இந்த தொடரில் ஜானகி மற்றும் சந்தியா என இரு சகோதரிகளுக்குள்ளும் இடையே இருக்கும் பாச போராட்டமும் அவர்களின் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளுமே இந்த தொடரில் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம் என்ற தொடரில் இன்று, ஜானகி கண்ணீருடன் ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்ல சந்தியா நான் ஏற்கனவே நிறைய முறை போயிட்டு வந்துட்டேன், இனிமே ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். 

அது மட்டுமில்லாமல் எனக்கு கேன்சர் இருக்கும் விஷயம் மாயாவுக்கு தெரியக்கூடாது என்று அக்கா ஜானகியிடம் சத்தியம் வாங்குகிறாள். அப்படியே மறுபக்கம் ரகுராம் ஊரில் பஞ்சாயத்தில் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் புவனேஸ்வரி உன் பொண்ணு யார் கூடயோ பைக்ல வந்துட்டு இருக்கா, நீ எல்லாம் பஞ்சாயத்தில் பேசுற என்று அவமானப்படுத்த ரகுராம் வேக வேகமாக கோபமாக வீட்டுக்கு வருகிறார். 

வீட்டுக்கு வந்து தன்னுடைய மகளுடன் வந்தவனை பலர் என்று அறைந்து முடியை பிடித்து இழுக்க அது டோப்பா என்பது தெரிய வருகிறது. ஆள் மாறாட்ட போட்டியில் பங்கு பெற்ற பெண் ஆண் வேடத்தில் தனலட்சுமி உடன் வந்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அப்பா இப்படி நடந்து கொண்டதால் தனலட்சுமி கோபமாக வீட்டுக்குள் சென்று விட எல்லோரும் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய ரகுராம் இப்படி அவசரப்பட்டுட்டோமே என வருத்தப்படுகிறார். 

மேலும் படிக்க | திதி கொடுக்க வந்த தமயந்தி - நளதமயந்தி சீரியல் அப்டேட்!

இந்த நேரம் பார்த்து அமெரிக்காவில் இருந்து போன் செய்யும் ஜானகி ரகுராமிடம் கண்ணீருடன் சந்தியாவுக்கு கேன்சர். இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இருப்பானு சொல்லிட்டாங்க என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க ரகுராம் இது எதையும் கேட்காமல் தன் மகள் வருத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க கடைசியில் சரி எதுவானாலும் இருக்கட்டும் சீக்கிரம் கிளம்பி வர வழியை பாரு என சொல்லி போனை வைக்க ஜானகி செய்வதறியாது நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News