மணிகண்டனின் குறட்டை காதல்.. நான் காலி வீடியோ பாடலை வெளியிட்ட குட்நைட் படக்குழு

இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘குட்நைட்’ படத்தின் ‘நான் காலி’ பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2023, 04:09 PM IST
  • குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
  • மணிகண்டன் நடுத்தர குடும்ப இளைஞராக நடித்துள்ளார்.
  • ‘நான் காலி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிகண்டனின் குறட்டை காதல்.. நான் காலி வீடியோ பாடலை வெளியிட்ட குட்நைட் படக்குழு title=

குட்நைட் படத்தில் ஜெய்பீம் , விக்ரம் வேதா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மணிகண்டன் மற்றும் இவருக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் பிரபல மடைந்த மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் - பக்ஸ், இயக்குனர் பாலாஜி சக்தி வேல், ரெபேக்கா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அத்துடன் இந்த படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனான மோகன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். அவர் தூங்கும் நேரத்தில் விடும் குரட்டை சத்தம் அவரை சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. இதனால் நண்பர்கள், அலுவலகம், அவர் நினைத்துகொண்டிருக்கும் காதலி என அனைவரிடத்திலும் அவவமானப்படுகிறார் மோகன். இதனால், வாழ்க்கையில் விரக்த்தியில் இருக்கிறார் அவர். அவர் காதலி குறட்டையை காரணமாக வைத்து பிரிந்து செல்ல, மோகன் மனமுடைந்து போகிறார்.

மேலும் படிக்க | திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

கதநாயகி மோகனுக்கு அறிமுகம் ஆக நாளடைவில் அது காதல் ஆக மாறி அது திருமணம் நடைபெறுகிறது. குறட்டையை மறைத்து திருமணம் செய்யும் மோகன், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி எப்படி வாழ்கிறார்கள் என்பதே படத்தின் கதையாகும்.

இந்த படத்தின் பிளஸ்: அம்மா,அக்கா, மாமா தங்கை என்று நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞனாக மிகவும் அழாகாக நடித்து இருக்கிறார் மணிகண்டன்.  இவர் நடிப்பு படத்தின் உள்ளே நம்மை இழுத்து செல்கிறது . கதாநாயகனுக்கு மாமாவாக ரமேஷ் பாலா நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகளும் நகைசுவையாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். 

கதநாயகி மீதா, தனது பங்கிற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கதையின் கதாபாத்திரத்திற்க்கு ஏற்ப நடித்து அசத்திருக்கிறார். ரமேஷ் பாலாவின் மனைவியாக ரேச்சல் நடித்திருக்கிறார் அவர் மணிகண்டனின் அக்கா குடும்பத்தை வழிநடத்தும் சிறப்பான கதாபாத்திரம். கதநாயகி தாத்தா பாட்டியாக பாலஜி சக்திவேலும், கெளசல்யா நடராஜனும் நடித்து இருக்கின்றனர்.  அதுவும் படத்தின் கூடுதல் பலமாக இருகிறது. படத்தின் ஒளிப்பதிவு ஜெயந்த் சேது மாதவன் அவரும் படத்தை நமக்கு அழாகாக காட்சி படுத்திருக்கிறார். 

நகைச்சுவையுடன் வாழ்வியலின் எதார்த்தை பேசி பீல் குட் திரைப்படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குட் நைட் திரைப்படம். மேலும் குட் நைட் திரைப்படத்திற்கு தமிழமெங்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வெற்றி திரைப்படமாக மாற்றினர். அத்துடன் இந்த படம் கூடிய விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

இந்த நிலையில் தற்போது குட்நைட் படத்தில் இடம்பெற்ற ‘நான் காலி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. குறட்டை வாழ்கை இருந்தாலும் காதலுடன் மணிகண்டன் செய்யும் ரொமான்ஸ் இந்த பாடலில் நாம் காணலாம். இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியுள்ளார். தற்போது இந்த வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | ‘இந்த அதிசயத்த பாருங்களேன்..’ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News