கமல் படத்தின் Title Teaser வெளியானது!! படத்தின் பெயர் இதுதான்….

கமலின் பிறந்தநாளன்று அவருடைய அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் வெளியிடப்படும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்ததார்.

Last Updated : Nov 7, 2020, 06:01 PM IST
  • சகலகலா வல்லவன் கமலின் ரசிகர்களுகு ஒரு good news!!
  • கமலின் அடுத்த படத்திற்கான டைட்டில் லாஞ்ச் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
  • இப்படம் பல வித மர்மங்கள் நிறைந்த ஆக்ஷன் அதிரடி படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கமல் படத்தின் Title Teaser வெளியானது!! படத்தின் பெயர் இதுதான்…. title=

சகலகலா வல்லவன் கமலின் (Kamal Haasan) ரசிகர்களுகு ஒரு good news!! கமலின் அடுத்த படத்தின் டைட்டில் டீசர் லாஞ்ச் ஆகிவிட்டது. படத்தின் பெயர் விக்ரம்!!

இந்திய திரைப்பட் உலகின் மிகச்சிறந்த நடிகர், திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கமலின் பிறந்தநாளன்று அவருடைய அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் லான்ச் செய்யப்படும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஏற்கனவே கூறியிருந்ததார்.

அதன் படி கமலின் அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

ALSO READ: Happy Birthday Kamal Haasan: உலக நாயகனுக்கு உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படத்தின் டைட்டில் டீசர் உங்கள் பார்வைக்கு:  

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசரே படு அமர்க்களமாக உள்ளது. இப்படம் பல வித மர்மங்கள் நிறைந்த ஆக்ஷன் அதிரடி படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கமல் நடிப்பைப் பற்றி கேட்கவே தேவையில்லை. தற்போது வந்துள்ள டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது!!

ALSO READ: கமல்ஹாசன் பிறந்தநாள்! பிக் பாஸ் 4 இல் சிறப்பு பரோமோவை வெளியிட்ட தொலைக்காட்சி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News