யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று பூஜையுடன் துவங்கியது!

Updated: Mar 13, 2019, 04:52 PM IST
யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

யஷ் - ஸ்ரீநிதி நடிப்பில் KGF திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று பூஜையுடன் துவங்கியது!

கன்னட திரையுலகில் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் KGF. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் பாகம் கன்னட மொழியில் உருவான போதிலும், கன்னட பதிப்பில் வெளியாகும் அதே நாளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

முதல் பாகம் கன்னட ரசிகர் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலக ரசிகர்களையும் பரவலாக கவர்ந்தது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை KGF படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாவது பாகத்தினை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகும் இப்படம் கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இன்று பூஜையுடன் துவங்கப்பட்ட படப்பிடிப்பில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.