GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..

MS Dhoni Cameo In The GOAT Movie  : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதை, அப்பட நடிகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2024, 11:55 AM IST
  • செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது தி கோட்
  • தோனி கேமியோ கன்ஃபார்ம்!
  • எந்த காட்சியில் வருகிறார்?
GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்.. title=

MS Dhoni Cameo In The GOAT Movie  : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர், நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் பல எதிர்பாராத சர்ப்ரைஸ்கள் காத்துக்கொண்டிருப்பதாக அப்படக்குழுவினர் வரிசையாக தங்களது நேர்காணல்களில் தெரிவித்து வருகின்றனர். அப்படி, அப்பட நடிகர் ஒருவரே தெரிவித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தி கோட் திரைப்படம்:

அரசியலில் முழு நேரமாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் கடைசி சில படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது, தி கோட் திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

நடிகர் விஜய்யின் டீ-ஏஜிங் லுக்கும் செயற்கையான இளமை தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் பாடல்களும் சரியாக படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை. இருப்பினும், நேற்று வெளியான ‘மட்ட’ பாடல், “தியேட்டர் மெட்டீரியல்” என்ற கருத்தை ரசிகர்களிடம் இருந்து பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?

தோனி இருக்கிறாரா? 

கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சென்னைதான் அவருக்கு பிடித்த டீம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அவர், தான் இயக்கும் படங்கள் அனைத்திலும் கண்டிப்பாக எப்படியாவது சி.எஸ்.கே ரெஃபரன்ஸை வைத்து விடுவார். அந்த வகையில், தி கோட் திரைப்படத்திலும் இது போன்ற ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இப்படத்தில் தோனி கேமியோ ரோலில் வருகிறார் என்று பல நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அப்பட நடிகரே ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். 

Aravind Akash

வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பராகவும், அவர் படங்களில் அடிக்கடி தோன்றுபவராகவும் விளங்கி வருபவர், அரவிந்த் ஆகாஷ். தி கோட் படத்தல் இவரும் நடித்திருக்கிறார். இப்படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் இவரிடம் தோனியின் கேமியோ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “க்ளைமேக்ஸில் சி.எஸ்.கே போட்டியனை காண்பிக்கிறோம். அப்போ சி.எஸ்.கே-னாலே யாரு ஹைலைட்? தாேனி தானே..அப்போ அவர காட்டாம எப்படி..க்ளைமேக்ஸ்ல ஸ்கிரீன்ல வருவாறு..” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, தோனியின் காமியோ கோட் படத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 24 படத்தில் தோனி கிரிக்கெட் ஆடுவது போலவும், சூர்யா அவருடன் போட்டோ எடுப்பது போன்றும் காண்பிக்க பட்டருக்கும். அதில் தோனியை கிராஃபிக்ஸ், கட்-அவுட் செய்து வைத்திருப்பர். அது போல, தி கோட் படத்திலும் ஏதேனும் ஒரு காட்சி இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தி கோட் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இதையடுத்து, விஜய் தனது 69வது படத்திலும் நடிக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News