SIIMA Awards 2024 : யார் யாருக்கு என்னென்ன விருது? வெற்றியாளர்கள் பட்டியல் இதோ!

SIIMA Awards 2024 Winners List  : சைமா 2024 விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், யார் யாருக்கு, என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2024, 01:12 PM IST
  • சைமா விருதுகள் 2024
  • சிறந்த நடிகர்-நடிகை யார்?
  • இதோ முழு வெற்றியாளர்களின் லிஸ்ட்!
SIIMA Awards 2024 : யார் யாருக்கு என்னென்ன விருது? வெற்றியாளர்கள் பட்டியல் இதோ! title=

SIIMA Awards 2024 Winners List  : தென்னிந்திய திரைத்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கும் விழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 15) துபாயில் நடந்தது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். 

விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட விருது..

நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்த நிலையில், அவருக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார். 

வெற்றியாளர்கள் லிஸ்ட்:

சைமா 2024 விருது வென்றவர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

சிறந்த நடிகர்:

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது, நடிகர் விகரமிற்கு வழங்கப்பட்டது. மணி ரத்னம் இயக்கத்தில் இவர், ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு இவ்விருது கிடைத்தது. 

சிறந்த நடிகர் (கிரிட்டிக்ஸ்)

கிரிட்டிக்ஸ்களீன் சிறந்த நடிகருக்கான விருதினை, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாவீரன் படத்திற்காக இவருக்கு இவ்விருது கிடைத்தது. 

சிறந்த நடிகை: 

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது, நயன்தாராவிற்கு கிடைத்தது. அண்ணபூரணி படத்திற்காக இவருக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த நடிகை (கிரிட்டிக்ஸ்:)

சிறந்த நடிகைக்கான (கிரிட்டிக்ஸ்) விருதினை நடிகை ஐஸ்வர்யா ராய் பெற்றுக்கொண்டார். இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக, இவருக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த பாடகர்:

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடகருக்கான விருது, ஷான் ரோல்டனிற்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, பாடலும் பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து “நான் காலி” பாடலை பாடியதற்காக இவருக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த அறிமுக இயக்குநர்:

கடந்த ஆண்டு, அறிமுக இயக்குநர்கள் பலரின் படங்கள் வெளியாகின. அந்த வகையில், அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருந்த போர் தொழில் படம் வெளியானது. இந்த படத்தை, விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். சைமா சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது இவருக்கு கிடைத்திருக்கிறது. 

சிறந்த இயக்குநருக்கான விருது: 

2023ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான விருதை, நெல்சன் திலீப்குமார் பெற்றிருக்கிறார். ரஜினி ஹீரோவாக நடித்திருந்த ஜெயிலர் படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இதனால், இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..

சிறந்த ஒளிப்பதிவாளர்: 

கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக இருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த துணை நடிகை: 

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது, சரிதாவிற்கு கிடைத்திருக்கிறது. இவர், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் சைமா விருதினை வென்றிருக்கிறார். 

சிறந்த துணை நடிகர்:

சிறந்த துணை நடிகருக்கான விருது, நடிகர் வசந்த் ரவிக்கு வழங்கப்பட்டது. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்ததற்காக இவர் இவ்விருதை வாங்கிக்கொண்டார்.

மேலும் படிக்க | சிம்பிளாக நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்! ஜோடி பொருத்தம் சூப்பரு-வைரல் போட்டோஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News