தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள் இவை தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், விக்ரம், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளியாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 9, 2023, 10:36 AM IST
  • லியோ அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • கங்குவா அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜப்பான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள் இவை தான்! title=

ஜெயிலர்: 'பீஸ்ட்' படத்திற்கு கிடைத்த பல எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் சுதந்திர தின வாரத்தையொட்டி ஆகஸ்ட்-10ம் தேதி வெளியாகுகிறது.

கேப்டன் மில்லர்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், சிவராஜ்குமார் போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.  இந்தத் திரைப்படம் 1940-களில் கேப்டன் மில்லர் என்ற விடுதலைப் புலி இயக்கத்தின் புரட்சியாளரை பற்றிய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்!

இந்தியன்-2: 'இந்தியன்' படத்தின் வெற்றியினை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் வெளிவரவிருக்கிறது.  இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.  இப்படம் தொடங்கியதிலிருந்தே படத்திற்கு பல சிக்கல்கள் எழுந்து வந்தது, பல போராட்டங்களை மீறி இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'தங்கலான்'.  இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் போன்றா பலர் முக்கியமான கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.  கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கத்தை பற்றிய கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகுகிறது.  இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே படத்தை காண வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது.

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் தான் 'மாமன்னன்'.  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

லியோ: 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் இணைந்துள்ள படம் 'லியோ'.  இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கங்குவா: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'கங்குவா' திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த ஃபேன்டஸி திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் பொருட்செலவில் உருவாகி வருகின்றது.  இப்படத்தில் திஷா பதானி, கோவை சரளா மற்றும் யோகி பாபு போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.  பெரியளவு எதிர்பார்க்கப்படும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பான்: அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற்ற பிறகு, கார்த்தி இப்போது ராஜு முருகன் எழுதி இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் போன்ற பலர் நடிக்கின்றனர்.  கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில், ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

மாவீரன் மற்றும் அயலான்: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகவுள்ளது.  'அயலான்' ஒரு அறிவியல் புனைகதை படமாகவும், 'மாவீரன்' ஒரு புதிரான கருத்தை கொண்ட படமாக உருவாகியுள்ளது. 

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கப்போகும் 62-வது படம் தான் 'விடாமுயற்சி'.  'ஏகே62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு மே 1 ஆம் தேதியன்று 'விடாமுயற்சி' என்று படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.  மே 22ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, விரைவில் இப்படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News