Oscars Awards 2023 updates: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது

Oscars 2023 Live Streaming: 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2023, 01:14 PM IST
Live Blog

Oscars 2023 Live Streaming: 95வது ஆஸ்கர் விருது விழா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஆஸ்கர் விருதையும் வெல்லும் என பலரும் கணித்து வருகின்றனர்.

13 March, 2023

  • 09:13 AM

    95th Oscars LIVE: 'Everything Everywhere All At Once' படத்திற்கு பெரிய வெற்றி
    Michelle Yeoh நடித்த 'Everything Everywhere All At Once' சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

  • 09:11 AM

    95th Oscars LIVE: Michelle Yeoh சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்
    'Everything Everywhere All At Once' படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையை மிச்செல் யோவ் படைத்துள்ளார். விருது பெறும் போது நடிகை உணர்ச்சிவசப்பட்டார்.

     

  • 09:00 AM

    Oscars 2023: சிறந்த நடிகர்
    சிறந்த நடிகருக்கான விருதை 'The Whale' படத்திற்காக பிரெண்டன் ஃப்ரேசர் பெற்றார்.

  • 08:59 AM

    Oscars 2023: எம்.எம்.கீரவாணி தனது உரையில் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார்
    சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலை கீரவாணி இசையமைத்துள்ளார், சந்திபோஸ் வரிகளை எழுதியுள்ளார். விருது பெற்ற இசையமைப்பாளர்  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். அவர் தனது உரையை முடிக்கும்போது பார்வையாளர்களிடம் 'நமஸ்தே' என்று கூறி விடைப்பெறறார்.

  • 08:52 AM

    Oscar Awards 2023 LIVE Updates: இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியா வென்றது
    சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     

  • 08:52 AM

    Oscars 2023: 'Everything Everywhere All At Once' வென்றது
    'Everything Everywhere All At Once' சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கார் விருதையும், சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுள்ளது.

  • 08:28 AM

    Oscars 2023 LIVE: சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது
    சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்!

  • 08:15 AM

    Oscars 2023: சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது
    சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது “Women Talking” படத்துக்கு கிடைத்துள்ளது.

     

  • 08:15 AM

    Oscars 2023: சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது
    95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Everything Everywhere All at Once  படம் வென்றுள்ளது. 

  • 07:56 AM

    Oscars 2023: சிறந்த விஷுவல் எபெக்ட்ஸூக்கான விருது
    சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது அவதார்: வே ஆஃப்ப் வாட்டர் படத்திற்கு கிடைத்துள்ளது. 

  • 07:55 AM

    Oscar 2023: சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது
    95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை All Quiet on the Western Front வென்றது.

     

  • 07:41 AM

    Oscars 2023: சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருது
    95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதை All Quiet on the Western Front படத்துக்கு கிடைத்துள்ளது.

  • 07:40 AM

    Oscars 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது
    95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை All Quiet on the Western Front படத்துக்கு கிடைத்துள்ளது.

  • 07:25 AM

    Oscars 2023 Live Updates: 95வது அகாடமி விருதுகளில் இந்தியா ஆஸ்கார் விருதை வென்றது
    நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திகு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

  • 07:25 AM

    Oscars 2023: சிறந்த சர்வதேச படத்துக்கான விருது
    சிறந்த சர்வதேச படமாக ஜெர்மனியின் All Quiet on the Western Front தேர்வு செய்யப்பட்டது. 

  • 07:17 AM

    Oscars 2023 LIVE: ஆஸ்கர் மேடையில் மாஸ் காட்டிய “நாட்டு நாட்டு” பாடல்
    ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர்.

  • 07:16 AM

    Oscars 2023 LIVE: சிறந்த ஆடை வடிவமைப்பு
    சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் "Black Panther: Wakanda Forever" படத்துக்கு கிடைத்துள்ளது.

  • 06:43 AM

    Oscars 2023 LIVE: சிறந்த ஒப்பனைக்கான விருது
    சிறந்த ஒப்பனைக்கான விருதை  “The Whale”  படம் வென்றது. இந்த படத்தில் ஆட்ரியன் மோட்ரோட்,  ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் கலைஞர்களாக பணியாற்றினர். 

  • 06:42 AM

    Oscars live Stream India 2023: சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது
    சிறந்த ஒளிப்பதிவுக்கான வென்றது All Quiet on the Western Front படம்  வென்றது.

     

  • 06:38 AM

    Oscars Live in India: சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான விருது
    சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “An Irish Goodbye” வென்றது.

  • 06:26 AM

    Oscars 2023 live Stream: 'சிறந்த ஆவணப்படம்' என்ற விருதை இந்தியாவின் ஆல் தட் ப்ரீத் தவறவிட்டது
    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  சிறந்த ஆவணப்படமாக Navalny  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா சார்பில் தேர்வான All That Breathes படத்திற்கு விருது கிடைக்கவில்லை.

  • 06:17 AM

    Oscars 2023: சிறந்த துணை நடிகை விருது
    95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்க்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக  நடிகை ஜேமி லீ கர்டிஸ்  வென்றார்.

  • 06:10 AM

    Oscars 2023: 'சிறந்த துணை நடிகர்' விருது
    சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்குப் பிறகு, இப்போது 'சிறந்த துணை நடிகர்' சிறந்த துணை நடிகருக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக கீ க்யூ குவான் வென்றார்.

  • 06:01 AM

    Oscars 2023 Winner: சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது...
    விருது வழங்கும் விழா தொடங்கியுள்ள நிலையில், கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ திரைப்படம் 'சிறந்த அனிமேஷன் திரைப்படம்' விருதைப் பெற்றுள்ளது.

  • 05:58 AM

    Oscars 2023: இந்திய படைப்புகள் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?
    ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி இந்திய ஆவணப்படமான ஆல் தட் ப்ரீத்ஸ், ஆவண குறும்படமான தி எலிபான்ட் விஸ்பர்ஸ் உள்ளிட்ட படங்களும் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய படைப்புகள் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா என்கிற எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தேசமும் ஆஸ்கர் விருதை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

  • 05:56 AM

    Naatu Naatu Oscars 2023: நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் நாமினேஷனில்
    இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.

  • 05:54 AM

    Deepika Padukone Oscars 2023: நடிகை தீபிகா படுகோனும் ஆஸ்கர் விருது விழாவுக்காக ரெடியாகி உள்ளார்.
    2023 ஆஸ்கார் விருதுகளை வழங்குபவர்களில் இந்தியாவின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே-வும் இருக்கிறார். இது இந்திய சினிமாவுக்கு கிடைத்த கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.

  • 05:52 AM

    Oscars 2023 Live: பார்வையற்றோர் ஆஸ்கார் விழாவின் முக்கிய நிகழ்வைப் பார்க்கலாம்
    'தி அகாடமி அவார்ட்ஸ்' அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பார்வையற்றோர்களும் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளின் முக்கிய நிகழ்வை அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

  • 05:48 AM

    Oscars 2023 Live Streaming: 95வது ஆஸ்கர் விருது விழா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எப்போது, ​​எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    ஆஸ்கார் 2023 இன் முக்கிய நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி, இன்று காலை 5:30 மணி முதல் அதாவது மார்ச் 13 காலை முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு வெளியே, இது ஹுலு லைவ் டிவி, யூடியூப் டிவி, ஏடி&டி டிவி மற்றும் ஃபுபு டிவி ஆகியவற்றிலும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Trending News