ஜாஸ்மினுடன் சூர்யாவுக்கு கல்யாணம்? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Maari Zee Tamil mega serial update: அறுந்து விழுந்த மாரியின் தாலி.. ஜாஸ்மினுடன் சூர்யாவுக்கு கல்யாணம்?.. பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jul 12, 2023, 11:28 AM IST
  • அறுந்து விழுந்த மாரியின் தாலி.
  • ஜாஸ்மினுடன் சூர்யாவுக்கு கல்யாணம்.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
ஜாஸ்மினுடன் சூர்யாவுக்கு கல்யாணம்? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நடந்த போட்டியில் ஜாஸ்மினுக்கு அடிபட்டது.  பிறகு சங்கரபாண்டி பேசி முடித்து வெளியே சென்றதை மாரி ரூமில் இருக்கும் போது சூர்யா தூக்கத்திலிருந்து எழுந்து என்ன மாரி ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்ன? என்னாச்சு என்று கேட்க ஹஸ்பண்டு சார் தேவி அம்மா உங்களை பாக்கணும்னு வந்தாங்க, ஆனா நீங்க தூங்கிட்டிங்க அவங்க உங்களை எழுப்ப முயற்சி செய்தும் நீங்க எழுந்துக்கவே இல்லை என்னாச்சுன்னு தெரியல என்று சொல்ல சூர்யா அம்மா என்னை பார்க்க வந்தாங்களா? என்னால பார்க்க முடியாமல் போயிடுச்சு என வருத்தப்படுகிறான். 

மேலும் படிக்க | பிரபல நடிகையின் காதல் கணவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு…!

அதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் இருவரும் ஒரு உரலை கொண்டு வந்து அதை வேகமாக சுற்றும் போட்டி நடத்துகின்றனர். இந்த போட்டியில் மாரியின் தலையில் இடிக்க வைத்து அவளுக்கு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடுகின்றனர். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க, ஜாஸ்மினுக்கு அடிபட சூர்யா இதை பார்த்து சிரிக்க தாரா டீம் மாரிக்கு எதிராக போட்ட பிளான் வேஸ்ட் ஆனதால் கடுப்பாகின்றனர். 

maari

அடுத்ததாக மாரி தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென அவளுக்கு சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டுவது போல தெரிய வந்து எழுந்து கொள்கிறாள், நமக்கு இப்படி தோணுனா அது அப்படியே நடந்துடுமே என்ன செய்வது என மாரி குழம்புகிறாள்.  இந்த குழப்பத்துக்கு இடையில் மறுநாள் சீமந்தம் நடத்திய பெண்ணுக்கு குழந்தை பிறந்து விட்டதால் குழந்தைக்கு பெயர் வைக்க சூர்யா வீட்டுக்கு தூக்கி வர மாரி குழந்தையை வாங்கி கொஞ்சும் போது குழந்தை மாரியின் தாலியை பிடித்து இழுக்க அது அறுந்து விழுகிறது. இதனால் மாரிக்கு பயம் இன்னும் அதிகமாகிறது, இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News