சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாக மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை வழங்க கோரி அவர்கள் வழக்கில் கோரிக்கை விடுத்திருந்தனர். சாந்தி தியேட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான 13,500 பங்குகளில், 600க்கும் மேற்பட்ட பங்குகள், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் வசம் உள்ளது.
இந்நிலையில், சாந்தி தியேட்டரை வாங்கிய அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனம், அங்கு வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டியுள்ளது.
மேலும் படிக்க | சிவாஜி பேர்ல போலி உயில் எழுதி சொத்தை ஏமாத்திட்டாங்க! பிரபு மீது சகோதரிகள் வழக்கு!
சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு காலமானார். சிவாஜியின் மகன் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். தற்போது, நடிகர் திலகத்தின் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சிவாஜியின் மகள்கள் தொடுத்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் படிக்க | அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!
நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுத்ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
தந்தை கணேசன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த வழக்கில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்களாக நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகர் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR