புதிதாக OTT தளம் தொடங்கினார் நடிகை நமீதா

புதிய ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நமீதா தெரிவித்துள்ளார்.

Last Updated : May 6, 2021, 06:25 PM IST
புதிதாக OTT தளம் தொடங்கினார் நடிகை நமீதா title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ‘நமீதா (Namita) தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி (Over-the-top media service - OTT) தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

ALSO READ | Best Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்

மேலும், புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நமீதா தெரிவித்துள்ளார். நமீதாவின் இந்த புதிய ஓடிடி தளம் அடுத்தமாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாம். இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது.,

திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். எனவே அதை திருப்பி அளிக்க நினைத்தேன். பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான் ரவி வர்மாவை சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார். அவர் தான் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பிக்கும் யோசனையை கொடுத்தார். 

புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்குத் தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். நாங்கள் இத்தளத்தைத் தொடங்கிய கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவிவர்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News