வேலை போயிடும் மிரட்டும் மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

Ninaithen Vandhai Serial Update: ரவுடிகளிடம் சிக்கிய சுடர்.. காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி - நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 2, 2024, 12:19 PM IST
  • ரவுடிகளிடம் சிக்கிய சுடர்...
  • காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி!
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் அப்டேட்
வேலை போயிடும் மிரட்டும் மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கேர் டேக்கரை பழி தீர்க்க குழந்தைகள் அவளை கீழே விழ வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

அதாவது, சுடர் ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூ செல்ல இவளை பார்த்த முதலாளி உன்னை நான் நல்லா பார்த்துக்கறேன், நீ என்னை கவனிச்சா மட்டும் போதும் என தப்பான நோக்கத்துடன் பேச சுடர் அவரை திட்டி விட்டு வெளியே வருகிறாள். 

அடுத்து இந்த கேர் டேக்கர் பெண்மணி மனோகரியை பார்க்க நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து விட மனோகரி இங்க எதுக்கு வந்த என கோபப்படுகிறாள், உடனடியா கொஞ்சம் பணம் தேவைப்படுது, உங்க கிட்ட பேசவும் முடியல அதனால் தான் நேரில் வந்ததாக சொல்கிறாள். இப்படிப் போகும் சீரியலில் அடுத்து என்ன தெரியுமா? ரவுடிகளிடம் சிக்கிய சுடர்.. காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி என சுவராசியமாக போகிறது.

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..

அந்த பசங்க ரொம்ப தொல்லை பன்றாங்க என்னால் முடியல வந்துடவா என்று கேட்க மனோகரி அந்த குழந்தைங்க என்ன பண்ணாலும் நீ அவங்களை அடிக்க கூடாது, நீ அடிக்கிறேன்னு எழிலுக்கு தெரிந்தால் உன் வேலை போய்டும் என மிரட்டி அனுப்புகிறாள். 

பிறகு சுடர் கொட்டும் மழையில் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க எழில் அந்த வழியாக காரில் வரும் போது இந்துவின் நினைவு வந்து விட ஒரு பிளாஷ்கட் ஓபன் ஆகிறது. இந்த நேரத்தில் எழிலுக்கு சுடர் இந்து போலவே தோன்றுகிறாள். இந்த சமயம் பார்த்து ரவுடிகள் சிலர் இந்துவிடம் தவறாக பேச அவர்களை திட்டி அனுப்பி விடுகிறாள். 

இதை பார்த்து எழில் இவளை காப்பாற்ற வர ரவுடி என நினைத்து பாட்டிலால் அவனது தலையில் அடித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News