வேலுவிடம் சிக்கிய தமிழ்.. வாயை கொடுத்து மாட்டிய மனோகரி - நினைதேன் வந்தாய் அப்டேட்!

Ninaithen Vandhai Zee Tamil Serial Latest Episode : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Yuvashree | Last Updated : Apr 15, 2024, 05:36 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல், நினைத்தேன் வந்தாய்
  • இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
  • இன்றைய எபிசோடில் என்ன நடக்க காத்திருக்கிறது?
வேலுவிடம் சிக்கிய தமிழ்.. வாயை கொடுத்து மாட்டிய மனோகரி - நினைதேன் வந்தாய் அப்டேட்! title=

Ninaithen Vandhai Zee Tamil Serial Latest Episode : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழை வேலு சுற்றி வளைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வேலு உண்மையான தமிழை கண்டு பிடித்து தனது கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கிறான், அடுத்து வீட்டில் எழில் சாப்பாடு கொடுத்து விட்டு வருவதற்காக ஆசிரமத்திற்கு கிளம்ப கனகவல்லி மனோகரியிடம் நாங்க எல்லாரும் வெளியே போறோம், நீ குழந்தைகளை பார்த்துக்கோமா என்று சொல்ல மனோகரி கேர் டேக்கரை விட நான் நல்லாவே பார்த்துப்பேன் என்று சொல்ல கனகவல்லி அப்படினா சுடர் நீ எழிலோட போய்ட்டு வா மா என்று சொல்ல மனோகரி ஷாக் ஆகிறாள். 

மேலும் படிக்க | வீரா சீரியல்: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை!

எழில் நான் தனியா போறேன் என்று சொல்ல கனகவல்லி சுடர் அவ கையால் சமைத்து இருக்கா, அவ கையாலே பரிமாறினால் அவளுக்கு சந்தோசமாக இருக்கும் என்று சொல்ல எழிலும் சுடரை அழைத்து கொண்டு கிளம்புகிறான், கனகவல்லி கோவிலுக்கு செல்ல குழந்தைகள் மனோகரியை டார்ச்சர் செய்கின்றனர். 

காரில் சுடர் பேசி கொண்டே இருக்க எழில் கொஞ்சம் பேசாமல் அமைதியா வா என்று திட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: முத்துபாண்டியை எதிர்த்த வெங்கடேஷ்.. அரிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News