தள்ளிப்போகும் ராகவா லாரன்ஸ் படம் - இந்த வருஷம் ரீலிஸ் இல்லை...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு பட வெளியீட்டு தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2022, 08:38 PM IST
  • ருத்ரன் திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • ஆனால், கிராபிக்ஸ் காரணமாக படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகிறது.
  • இத்திரைப்படம் 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
தள்ளிப்போகும் ராகவா லாரன்ஸ் படம் - இந்த வருஷம் ரீலிஸ் இல்லை...  title=

5 ஸ்டார் கிரீயேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்து, இயக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இதில், கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படத்தல், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ராகவா லாரன்ஸின் திகில் திரில்லர் வகை திரைப்படமாக தயாராகும் ருத்ரன்  திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இத்திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்தாண்டு ரீலிஸ் செய்ய இயலாது என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Raghava Lawrence, ராகவா லாரன்ஸ்

மேலும் படிக்க | துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இவரை பற்றியா?

மேலும், அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு அன்று (ஏப். 14) ருத்ரன் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. ரகாவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி சீரிஸ் திரைப்படங்கள் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியாகியிருந்தது. மேலும், அவரது படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பு இருப்பதால், ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை அன்று பட வெளியீட்டை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

Raghava Lawrence, ராகவா லாரன்ஸ்

ரகாவா லாரன்ஸ் தயாரிப்பில் வெளியான காஞ்சனா-3  திரைப்படம் 2019ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. 3 ஆண்டுகள் கழித்து அவரின் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரைப்படம் இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்  'ருத்ரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த 'சூர்யா 42' படக்குழுவினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News