நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. ரஜினி நடிப்பில் வெளியான கடந்து சில படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிக அளவில் இருந்தது. மேலும் ஜெயிலர் படத்திற்கு முன் நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம் சரியாக போகவில்லை. இதனால் ஆரம்பத்தில் இயக்குனரை மாற்றலாமா என்ற பேச்சும் எழுந்தது, பிறகு நெல்சன் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து இருந்தது. மோகன்லால், ராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, மிர்னாள் தாகூர் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.
ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மிகப்பெரிய பேசு பொருளானது ரஜினியின் ஸ்பீச் தான். ரஜினி காக்கா - கழுகு என்ற ஒரு கதையை மேடையில் பேசியிருந்தார். கழுகு உயிரே பறந்து கொண்டிருக்கும் அதை பார்த்து காக்காவும் பறக்க நினைக்கும், ஆனால் ஒருபோதும் காக்கா கழுகாக மாற முடியாது என்ற கதையை சொல்லியிருந்தார். விஜய்யை தான் ரஜினி காக்கா என்று கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டன. மேலும் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசியிருந்த விஜய், கழுகு என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசினார். இதற்கு அரங்கம் நிறைந்த கைதட்டுகள் வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
"விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிருக்கும். ஷூட்டிங் பார்த்துட்டிருந்தாங்க. ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. நீங்க சொல்லுங்க, படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு நீங்க சொல்லுங்க என்றார். அப்ப விஜய்ட்ட நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாம்னு சொன்னேன். அதுக்கப்பறம் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். நெக்ஸ்ட் அரசியல்... சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு... எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா... ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு. தயவு செஞ்சு ரெண்டு பேர் ஃபேன்ஸும் ஒப்பிடவேண்டாம். நிப்பாட்டுங்க... இது என்னுடைய அன்பான வேண்டுகோள்... ப்ளீஸ்.. ரொம்ப நன்றி!" என்று கூறியுள்ளார்.
Clarification from Superstar Rajinikanth at the #LalSalaamAudioLaunch about the KAAKA KAZHUGU speech
Many have misunderstood the 'Kaaka-kazhugu' story of mine as an attack to Vijay. It hurts me a lot that people are seeing it as competition. Both of us have said that we are…
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 26, 2024
முன்னதாக பொங்கலுக்கு வெளியாக இருந்த லால் சலாம் படம் சில காரணங்களால் தள்ளிப் போனது, தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் முதன்மையாக கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தை பற்றி பேசுகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ