Saba Nayagan: ‘சபா நாயகன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?

Saba Nayagan OTT: நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவான “சபா நாயகன்” திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.    

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 16, 2024, 07:50 PM IST
  • அசோக் செல்வன் நடித்த படம், சபா நாயகன்
  • இந்த படம் ஓடிடியில் வெளியானது
  • இதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
Saba Nayagan: ‘சபா நாயகன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா? title=

Saba Nayagan OTT Release Date: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை  ஸ்ட்ரீம் செய்து வருகிறது.  அந்த வரிசையில் தற்போது,  நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவான “சபா நாயகன்” திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.  

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர்  நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்  "சபா நாயகன்". ரசிகர்கள்  முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில்  அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் கலக்கலான காமெடி கலந்து சொல்கிறது இப்படம். ரொமான்ஸ் கலந்த ப்ரொமான்ஸ் காமெடி படமாக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய C.S. கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். Clear Water Films Inc. சார்பில் அரவிந்த் ஜெயபாலன்  i cinema சார்பில் ஐயப்பன் ஞானவேல்  & Captain Mega Entertainment  சார்பில் கேப்டன் மேகவாணன் இசைவாணன்  இணைந்து தயாரித்துள்ளனர். 

மூன்று காலகட்டத்தில் விதவிதமான தோற்றங்களில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி & மேகா ஆகாஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். அருண் குமார் ஜெய்சீலன், ஶ்ரீராம் நண்பர்களாக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | Keerthy Suresh: ‘அந்தமாதிரி’ காட்சியில் நடிக்க சொன்னதால் பிரபல நடிகருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்!

இப்படம் குடும்பத்தோடு சிரித்து மகிழ மிகச்சரியான பொழுது போக்கு திரைப்படம் எனும் வகையில், பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு, பார்வையாளர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 

அசோக் செல்வனின் படங்கள்:

நடிகர் அசோக் செல்வனுக்கு கடந்த ஆண்டு கீர்த்தி பாண்டியனுடன் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சாந்தனுவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில், நித்தம் ஒரு வானம், வேழம் உள்ளிட்ட படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Jayam Ravi: நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News