சீதா ராமன் அப்டேட்: விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட சீதா.. ராம் கொடுக்கும் அதிர்ச்சி

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2024, 02:28 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • சவாலை ஒப்புக்கொள்ளும் சீதா
  • சீதா மீது கோவப்படும் ராம்
சீதா ராமன் அப்டேட்: விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட சீதா.. ராம் கொடுக்கும் அதிர்ச்சி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி சவாலை ஏற்பதாக சீதா சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சவாலை ஒப்புக்கொள்ளும் சீதா

அதாவது, சீதா சவாலில் தோற்றால் ராமை விவாகரத்து செய்து பிரிவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுகிறாள். 

பிறகு ராஜசேகர் ராமிடம் இந்த விஷயத்தை சொல்லி என் பொண்ணு லூசு மாப்ள, அவ எப்படியும் தோற்க தான் போறா என்று சொல்ல ராம் கோபமாக வீட்டுக்கு வருகிறான். 

சீதா மீது கோவப்படும் ராம்

சீதாவை பார்த்து உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட எதுக்கு சவால் முடியும் வரைக்கும் காத்திருக்கணும்? இப்போவே வீட்டை விட்டு போயிடு என கோபம் அடைய சீதா சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராம் கோபம் குறையாமல் இருக்கிறது.

பிறகு சீதா கீழே வரும் போது ராமின் தங்கைகளும் உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட என்று கேள்வி கேட்க எனக்கு துணையாக முத்தாரம்மன் இருப்பா என்று சொல்லி படுக்க சென்று விடுகிறாள். 

மேலும் படிக்க | பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இரவு சீதா அசந்து தூங்கி கொண்டிருக்க கொலுசு சத்தம் கேட்டு கண் திறக்க முத்தாரம்மனா வந்து நிற்கிறார். என் கூட வா என மகாவின் கல்லறைக்கு அழைத்து சென்று சமாதியை தட்டி காட்ட சீதா புரியாமல் நிற்கிறாள். நான்சியும் மொட்டை மாடியில் இருந்து இது அனைத்தையும் பார்க்க அவளுக்கு சீதா மட்டும் தான் தெரிகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி! அய்யய்யோ என்னாச்சு? ரசிகர்கள் பதற்றம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News