சீதா ராமன் அப்டேட்: ராமுடன் ஆபிஸ் கிளம்பிய மதுமிதா.. சீதா வைக்கப் போகும் ஆப்பு என்ன?

Seetha Raman Today's Episode Update: ராமுடன் ஆபிஸ் கிளம்பிய மதுமிதா.. சீதா வைக்கப் போகும் ஆப்பு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 12, 2023, 11:32 AM IST
  • சீதாவிடன் சவால் விடும் மகாலட்சுமி.
  • ஆபீசில் மதுமிதாவுக்கு உற்சாக வரவேற்பு.
  • பயங்கர கடுப்பில் இருக்கும் சீதா
சீதா ராமன் அப்டேட்: ராமுடன் ஆபிஸ் கிளம்பிய மதுமிதா.. சீதா வைக்கப் போகும் ஆப்பு என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மதுமிதா பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்க அங்கு வரும் மகா அவளுக்கு நெற்றியில் விபூதி வைத்து விட எங்க அம்மாவும் இப்படித்தான் பண்ணுவாங்க என்று மது ஃபீல் பண்ண மகா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உனக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் நான் செய்வேன் என்று பேசுகிறாள். 

சீதாவின் பேச்சை கேட்காத ராம், மதுமிதா

அது மட்டுமல்லாமல் நீ வீட்டில் இருப்பதினால் தான் உனக்கு தேவையில்லாத சிந்தனை எல்லாம் வருகிறது, நீ ராமோட ஆபீசுக்கு போ.. அவனுக்கு ஒரு அக்கவுண்ட் தேவைப்படுது என்று சொல்லி மதுவை தனது வழிக்கு கொண்டு வர முயற்சி செய்ய, சீதா நீ இவங்க சொல்ற மாதிரி ஆபீசுக்கு போகாத என தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள். ஆனால் மதுமிதா, ராம் என இருவரும் சீதாவின் பேச்சை கேட்கவில்லை. 

மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் ‘தெறி’ பட பாடல் பிரபல ஆங்கில வெப் தொடரில் ஒளிபரப்பு..!

சீதாவிடன் சவால் விடும் மகாலட்சுமி

மதுமிதா புதுப்பொலிவுடன் ராமுடன் ஆபீசுக்கு கிளம்பிச் செல்கிறாள்.

ல மகாலட்சுமி சீதாவிடம் அடியே தையல் காரி நீ பயப்படுற மாதிரி தான் நடக்க போகுது. ஆபீஸ்ல வச்சி அவங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைப்பேன் என சவால் விட்டு மகாவும் ஆபீசுக்கு கிளம்பி செல்கிறாள். 

ஆபீசில் மதுமிதாவுக்கு உற்சாக வரவேற்பு

அதைத்தொடர்ந்து ஆபீஸ்க்கு வரும் மதுமிதாவை அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு வரவேற்க பிறகு ராம் இது எல்லாம் சித்தியோட ஏற்பாடு என்று சொல்ல மதுமிதா சந்தோஷப்படுகிறாள். 

பயங்கர கடுப்பில் இருக்கும் சீதா

மறுபக்கம் சீதா பயங்கர கடுப்பில் இருக்க மீரா எல்லாரும் ஆபீஸ்க்கு போய்ட்டாங்க நீ என்ன பண்ற என்று கேட்க நான் ஒரு பிளான் வச்சிருக்கேன் என்று சொல்லி சீதா காரம், புளிப்பு, உப்பு என எல்லாத்தையும் அதிகமாக சேர்த்து சமையல் செய்கிறாள். இந்த சாப்பாட்டை சாப்பிட்டு இனி யாரும் ஆபிசுக்கு போகவே கூடாது என திட்டம் போடுகிறாள். 

சூர்யாவின் போட்டோவை கிழித்து போடும் மதுமிதா

இங்கே மகா ஆபீஸில் மதுமிதாவுக்கு எல்லா வேலையும் செய்து கொடுத்து ராம் பக்கத்தில் ஒரு கேபினை உருவாக்கி நீ இங்க தான் உட்காரணும் என சொல்கிறாள். பிறகு ஆஃபீஸில் உள்ள பூஜை அறைக்கு கூட்டிச்சென்று நீ பழைய வாழ்க்கையை மறந்திடு, இனிமே எல்லாம் புதியதாக நல்லபடியாக இருக்கட்டும் என்று பிரைன் வாஷ் செய்கிறாள். இதைக் கேட்ட மதுமிதா சூர்யாவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவில் சூர்யாவின் போட்டோவை மட்டும் கிழித்து குப்பை தொட்டியில் போடுகிறாள்.

வீட்டில் சாப்பாடு செய்து சீதா அதை எடுத்துக் கொண்டு ஆஃபீஸுக்கு கிளம்பி வருகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன் : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Amudhavum Annalakshmiyum: உயிர் பிழைத்த சிதம்பரம்.. அன்னத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News