ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது யார்?

பிக்பாஸ் அல்டிமேட் மணி டாஸ்கில் 15 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் வெளியேறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 31, 2022, 07:46 PM IST
  • இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்
  • மணி டாஸ்கில் ஜூலி மற்றும் ஸ்ருதி இடையே கடும்போட்டி
  • ஸ்ருதி ரூ.15 லட்சத்துடன் வெளியேறியதாக தகவல்
ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது யார்? title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய வடிவம் பெற்று, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த 5 பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பாலா, ஜூலி, ஸ்ருதி, அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் இந்த 24 மணி நேர பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டுள்ளனர். 60 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட்டை, நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க | விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!

விக்ரம் படப்பிடிப்பு பணிகள் காரணமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். ஆனால், அடுத்த பிக்பாஸ் சீசனில் மீண்டும் கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் மணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 3 லட்சம் மற்றும் 5 லட்சம் என படிப்படியாக தொகையை வைத்த பிக்பாஸ், விரும்புபவர்கள் அந்த தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் எனக் கூறியிருந்தார். மற்ற ஹவுஸ்மேட்களைக் காட்டிலும் ஜூலி மற்றும் ஸ்ருதி இடையே பணப்பெட்டியை எடுக்க கடும் போட்டி நிலவியது. 

பணப் பெட்டியில் 15 லட்சம் ரூபாய் தொகை வைக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் விடாப்பிடியாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருந்தனர். ஆனால், யாரேனும் ஒருவர் மட்டுமே பணப்பெட்டியுடன் வெளியேற முடியும் என்பதால், யார் என்பதை தீர்மானிக்க பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். சேற்றில் நின்று கொண்டு ஒருவரை தள்ளிவிட்டு மற்றொருவர் பந்தை சேகரிக்க வேண்டும் என்பது தான் அந்தப் போட்டி. இந்தப் போட்டியில் ஜூலியும், ஸ்ருதியும் கடுமையாக மோதிக் கொண்டனர். முதல் கட்ட போட்டியின் இறுதியில் ஸ்ருதி வெற்றிப் பெற்றுள்ளார். இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற ஸ்ருதி, இப்போது வரை லீடிங்கில் இருக்கிறார். ஆனால், அவர் பணப் பெட்டியுடன் வெளியேறினாரா? என்பதை பிக்பாஸ் புரோமோவில் காட்டவில்லை. இருப்பினும் 15 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியது ஸ்ருதி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | நீ ஒன்னும் பிக்பாஸ் இல்ல ! வனிதா-பாலா இடையே வெடிக்கும் சண்டை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News