சூர்யா-வின் 39-வது படத்திற்கு ‘அருவா’ என பெயர் சூட்டப்பட்டது...

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின்னர் சிவா இயக்கத்தில், சூர்யாவின் 39-வது படம் உருவாகும் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படம் துவங்குவதற்கு முன்னதாகவே சிவா, ரஜினிகாந்தின் 168-வது படத்தை இயக்கப் சென்றுவிட்டார்.

Updated: Mar 1, 2020, 04:21 PM IST
சூர்யா-வின் 39-வது படத்திற்கு ‘அருவா’ என பெயர் சூட்டப்பட்டது...

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின்னர் சிவா இயக்கத்தில், சூர்யாவின் 39-வது படம் உருவாகும் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படம் துவங்குவதற்கு முன்னதாகவே சிவா, ரஜினிகாந்தின் 168-வது படத்தை இயக்கப் சென்றுவிட்டார்.

முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த போது ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்காக விட்டுக் கொடுத்தார் சூர்யா எனவும் செய்திகள் வெளியானது. இதன் போது தான் கபாலி திரைப்படமும் உருவானது. இந்நிலையில் தற்போது மீண்டும், மீண்டும் ரஜினிக்காக சிவாவை விட்டுக் கொடுத்தார் சூர்யா என கூறப்படுகிறது.

ரஜினியின் 168-வது திரைப்படம் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் நிலையில் சூர்யாவின் 39-வது திரைப்படத்தினை  சிவாவிற்குப் பதிலாக ஹரி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் கதை விவாதம் உள்ளிட்ட அனைத்தும் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு ‘அருவா’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சூர்யா உடனடியாக இந்தப் படத்தை ஆரம்பிக்க இருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான அறிவிப்பின் படி ’அருவா’ திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகின்றார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படம் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் 6-வது திரைப்படம் ஆகும். அதேவேளையில் இயக்குநர் ஹரிக்கு இது 16-வது திரைப்படம் ஆகும். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி ஒரே கட்டமாக நடைபெறும் எனவும், வரும் 2020 தீபாவளி அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.