ரஜினி, கமல் வரிசையில் பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் சிவகார்த்திகேயன்?

கானா படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jun 26, 2020, 03:37 PM IST
ரஜினி, கமல் வரிசையில் பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் சிவகார்த்திகேயன்?
Photo: Twitter/@Siva_Kartikeyan

சென்னை: கோலிவுட் (Kollywood) நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர். ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பொழுதுபோக்கு துறையில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக அவரது மிகப்பெரிய வளர்ச்சி, சினிமா துறையில் நுழைய நினைக்கும் பல ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக வந்துள்ளது. இப்போது, அவரைக்குறித்து ​​ஒரு சுவாரஸ்யமான செய்தியில், "கானா" (Kanaa) படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக அவர் தயாராகிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களால் தயாரிக்கப்பட்ட, இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajessh) முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் இந்திய கிரிக்கெட் அணியில் ஆட விரும்பும் ஒரு ஏழை பெண்களின் வாழ்க்கை பற்றியது மற்றும் சிவகார்த்திகேயன் பயிற்சியாளராக இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் ரீமேக் (Kanaa remade in Hindi) செய்யப்படுவதாக முன்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பாலிவுட் (Sivakarthikeyan in Bollywood) பதிப்பிலும் சிவகார்த்திகேயன் பயிற்சியாளராகக் காணப்படுவார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ரீமேக்கில் அவர் நடிப்பார் என எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என்ற உறுதியான தகவலை அறிய காத்திருக்க வேண்டும்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் கடைசியாக பி.எஸ் மித்ரான் (Director PS Mithran) இயக்கிய "ஹீரோ" (Hero) படத்தில் நடித்தார். இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அவர் அடுத்து "அயலான்" (Ayalaan) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம், 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் "அயலான்" படத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.