எந்திரன் முதல் கஜினி வரை..ஹாலிவுட் படங்களை பார்த்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..!

தமிழ் சினிமாவில் பல படங்கள் ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையை எடுத்துக்காட்டாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. அப்படி உருவான சில படங்களை பார்க்கலாமா..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2023, 12:11 PM IST
  • தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற சில படங்கள் ஹாலிவுட் படங்களினால் ஈர்க்கப்பட்டவை.
  • லிஸ்டின் சூர்யா, ரஜினி படங்கள் உள்ளன.
  • வேறு என்னென்ன படங்கள் இருக்கின்றன..?
எந்திரன் முதல் கஜினி வரை..ஹாலிவுட் படங்களை பார்த்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..! title=

எந்த படத்தினை எடுத்துக்கொண்டாலும் அந்த படத்தினை எடுக்கும் இயக்குநருக்கு கதை குறித்த ஐடியா எங்கிருந்தாவது உதயமாகியிருக்கும். உதாரணத்திற்கு, சமீபத்தில் வெளியாகியிருந்த ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு அந்த படத்தை எடுக்க வேண்டும் என ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை பார்த்தவுடன் தோன்றியதாம். இது போல நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் பலர் வெளிநாட்டு படங்களில் இடம் பெற்றுள்ள கதைகளை ஒரு எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு படம் இயக்குவதுண்டு. இது பல காலமாக நடைப்பெற்று வருகிறது. அப்படி ஹாலிவுட் கதைகளை இன்ஸ்பிரேஷனாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோமா..? 

மேலும் படிக்க | கவின் திருமணம் செய்து கொள்ள போவது இந்த பெண்ணைத்தான்..! வெளியானது புகைப்படம்..!

கஜினி:

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம், கஜினி. இந்த படத்தில் சூர்யா, அசின் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த படம் மொமெண்டோ. இந்த படத்தை வைத்துதான் கஜினி படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

விசில்:

பேய் படம் போல காண்பிக்கப்பட்டு பின்பு த்ரில்லர் பாணியில் பயணித்து இறுதி வரை படம் பார்ப்பவர்களை இருக்கை நுணியில் அமர வைத்த படம், விசில். இந்த படத்தில் ஷெரின், காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படமும் ஒரு வெளிநாட்டு படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு உருவக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது. 1998ஆம் ஆண்டு ஜேமீ ப்ளாங்க்ஸ் என்பவர் இயக்கியிருந்த அர்பன் லெஜண்ட் என்ற படத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மன்மதன் அம்பு:

மாதவன், கமல், சங்கீதா, த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருந்த ஃபீல் குட் படம், மன்மதன் அம்பு. இந்த படத்தினைகே.எஸ் ரவிகுமார் மற்றும் ராஜேஷ் எம் ஆகியோர் இயக்கியிருந்தனர். 1929ஆம் ஆண்டு வெளிவந்த ஹை சீஸ் எனும் படத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அபியும் நானும்:

ராதா மோகனின் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம், அபியும் நானும். பிரகாஷ் ராஜ் தந்தையாகவும் அவருக்கு மகளாக த்ரிஷாவும் நடித்திருப்பர். இப்படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.1991 ஆம் ஆண்டு வெளியான ஃபாதர் ஆஃப் தி ப்ரைட் எனும் ஹாலிவுட் திரைப்படத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

எந்திரன்:

பிரம்மாண்ட இயக்குநர் என பலரால் புகழப்படும் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், எந்திரன். ஒரு ரோபோவிற்கு உணர்ச்சிகள் வருவதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதே இதன் கதைக்களம். இது, ஆங்கிலத்தில் 1987ஆம் ஆண்டு வெளியாகியிருந்த மேக்கிங் மிஸ்டர் ரைட் என்ற படத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அவ்வை ஷண்முகி:

கமல்ஹாசன் பெண்ணாக வேடமிட்டும் டான்ஸ் மாஸ்டராகவும் நடித்திருந்த படம், அவ்வை ஷண்முகி. இந்த படத்தில் மீனா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை கே.எஸ் ரவிகுமார் இயக்கியிருந்தார். இப்படம், 1993ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டவுட் ஃபயர் எனும் படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கோலிவுட் to ஹாலிவுட்..இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்-தொடர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News