எங்கள் நேசக்கரத்தை நீட்டுகிறோம்.. உங்கள் பாசக்கரத்தால் கை குலுக்குங்கள்..

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 17, 2021, 06:33 PM IST
எங்கள் நேசக்கரத்தை நீட்டுகிறோம்.. உங்கள் பாசக்கரத்தால் கை குலுக்குங்கள்.. title=

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. 

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:

மதிப்பிற்குரிய திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம்! 

உங்களின் சமூக பங்களிப்பு நாடறிந்ததே! திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இன்று குறைந்திருப்பது உங்கள் சமூக அக்கறையால்தான். அதற்கு எங்களின் நன்றி!

தாங்களும், தங்களின் தந்தையாரும் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பல சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முன்னின்று குரல் கொடுத்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைந்து தமிழனாக நீங்கள் பார்த்த பார்வையில் தமிழ்ப்பற்றையும், உணர்வையும் அறிந்தவர்கள் நாங்கள். 

அடித்தள மக்களுக்கு நீங்கள் கொடுத்த குரலைத்தான் இன்று "ஜெய்பீம்" திரைப்படமும் கொடுத்திருக்கிறது. சமூக அக்கறையோடும், சமூக அவலங்களின் பிரதிபலிப்பாகத்தான் பெரும்பாலும் நம் திரைப்படங்கள் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட படம் தான் இந்த ஜெய்பீம். 

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சமூகநீதி காக்க உருவான படம்தான் இது. பட்டுவேட்டியில் ஒரு புள்ளியளவு கறைபோல் ஏதேச்சையாக அல்லது தவறுதலாக உங்கள் சமூக குறியீடு ஒரு காட்சியில் வந்துவிட்டது. அது மிகவும் வருந்ததக்கது. அதை நீங்கள் சுட்டிக்காட்டியதும், உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்தக் குறியீடு நீக்கப்பட்டது. 

பிறகு திரு.சூர்யா அவர்களிடம் நீங்கள் நாகரிகமாக கேட்ட கேள்விகளுக்கு, சூர்யா அவர்களும் நாகரிமாக பதில் அளித்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விக்காக திரு. சூர்யா அவர்கள் செய்யும் சேவையை உங்களைப்போல் நாடும் நன்கறியும். 

tamil nadu film directors association

சூர்யா வெறும் ஒரு நடிகர் என்றிருந்தால் எங்கள் ஆதரவு குரல் ஒலித்திருக்காது. ஆனால் அவர் சமூக அக்கறையுள்ளவர், ஏழைகளின் கல்விக் கண்ணுக்கு கருணைப் பார்வையாய் ஒளிர்கின்றவர். அதனால்தான் அவர்மீது எந்த தவறும் இருக்காது என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம். 

நீங்கள் உணர்வுமிக்க தமிழன், திரு. சூர்யா அவர்களை தமிழனாக பாருங்கள் உங்கள் சகோதரனாக பாருங்கள். அப்பொழுது உங்கள் கோபம் பாசமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை தமிழர்களாகிய எங்களுக்கு உண்டு. 

திரையில் படைப்பு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அதில் தெரியாமல் ஒரு தவறு நடந்தால் நட்புரீதியாக அதைத் தீர்த்துக்கொள்வதே ஆரோக்கியமாக இருக்கும். எங்கள் நேசக்கரம் நீட்டுகிறோம், உங்கள் பாசக்கரத்தால் கை குலுக்குங்கள்"

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News