Thalaivar 171: மீண்டும் அதே ஹீரோவை தேடி செல்லும் லோகேஷ்? இந்த முறை நடக்குமா?

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் இடம் பேசி வருகிறார் லோகேஷ்.  

Written by - RK Spark | Last Updated : Nov 7, 2023, 09:17 AM IST
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி.
  • அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
  • லாரன்ஸ் வில்லனாக நடிக்க வாய்ப்பு.
Thalaivar 171: மீண்டும் அதே ஹீரோவை தேடி செல்லும் லோகேஷ்? இந்த முறை நடக்குமா? title=

Thalaivar 171: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு லியோ படத்திற்கு முன்பே வெளியானது.  மேலும் படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, ​​இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ராகவா ஆல்ரன்ஸை படக்குழு அணுகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.  சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.  இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. 

மேலும் படிக்க | சினிமா.. கட்சி.. பிக்பாஸ்.. கோடிகளுக்கு மேல் சொத்து மதிப்பு.. கலக்கும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 328.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 18 நாட்களின் முடிவில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 316 கோடியை ஈட்டிய ஜெயிலரை விட, லியோ வசூலில் முந்தியுள்ளது.  3 வாரங்களை தாண்டியும் லியோ பிளாக்பஸ்டர் படமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இப்போது ஜெயிலரின் இந்திய பாக்ஸ் ஆபிஸ் சாதனை மட்டுமல்லாமல், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் நெருங்கி வருகிறது.  ஜெயிலரின் வசூல் ரூ. 604 கோடியாக இருந்தாலும், கடந்த சனிக்கிழமை வரை லியோ ரூ. 566 கோடி வசூல் செய்துள்ளது.  லியோ படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கௌதம் மேனன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படம் வெளியானது. 

லியோ படத்தை போலவே லோகேஷ் கனகராஜ் பல ஆச்சரியமான தேர்வுகளை தலைவர் 171 படத்திலும் கொண்டு வர உள்ளார்.  ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸை வில்லனாக கொண்டுவர இயக்குனர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரில் முதலில் ராகவா லாரன்ஸை லோகேஷ் கனகராஜ் அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் லாரன்ஸ் நடிக்கவில்லை. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க லாரன்ஸிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய மூன்று படங்களும் LCUன் ஒரு பகுதியாக உள்ள நிலையில், தலைவர் 171 இதில் வராது என்று லோகேஷ் ஏற்கனவே தெளிவு படுத்தி உள்ளார்.  

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  இதுவும் ஒரு பான் இந்தியா படமாக மிகப்பிரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டுள்ளது.  பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  சமூக கருத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.  மேலும் அடுத்த ஆண்டு ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் படமும் திரைக்கு வர உள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News