விஜய்யின் அம்மா ஷோபாவின் செம ரீல்ஸ் வீடியோ.. உடனே பாருங்கள்

விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 11, 2023, 11:36 AM IST
  • நடிகர் விஜய்யின் அம்மா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ.
  • இந்த ரீல்ஸ் வீடியோவை சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் செய்திருந்தார்.
  • "So beautiful , so elegant, just looking like a WOW" வீடியோ.
விஜய்யின் அம்மா ஷோபாவின் செம ரீல்ஸ் வீடியோ.. உடனே பாருங்கள் title=

தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவின் வைரல் வீடியோ: தளபதி விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தளபதி விஜய் 90-களில் ஹீரோவாகி, பின்னர் வளர்ந்து வரும் நடிகர், உச்ச நடிகர் என படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும் இன்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் தளபதி விஜய் இருக்கிறார். 

இளைய தளபதியாக இருந்த தளபதி விஜய் (Actor Thalapathy Vijay) தற்போது தளபதியாக மாறி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் தளபதி விஜய் படம் என்றால் கட்டாயம் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடக்கும் என்று என்பதால் அவரை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் குடும்பத்தினர் பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர், தாய் ஷோபா பின்னணி பாடகியாக இருந்தவர். 

மேலும் படிக்க | பையா 2: கார்த்தியும் இல்லை, ஆர்யாவும்  இல்லையாம்.. பிரபல வாரிசு நடிகரின் மகன் தான் ஹீரோ

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரது சம்பளம் 150 கோடிக்கும் மேல் சென்றுவிட்டது. இருப்பினும் எஸ்ஏ சந்திரசேகர் 78 வயதிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அம்மா ஷோபாவும் அடிக்கடி மீடியாவில் பேட்டி கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அம்மா (Shoba Chandrasekhar) செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ரீல்ஸ் வீடியோ சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் செய்த "So beautiful , so elegant, just looking like a WOW" ஆகும். ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் தான் அவர் இருக்கிறார். 

இதோ நடிகர் விஜய்யின் அம்மா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ இதோ:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonia Vikram (@sonia.vikram)

இந்த ரீல்ஸ் வீடியோ ஷோபா அவர்கள் சோனியா விக்ரம் என்பவருடன் இணைந்து எடுத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் (Viral Video) மிகவும் வைரலாக அது பரவி வருகிறது. தளபதியின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர். ஷோபா அவர்கள் தமிழ் நாடு அரசு இசை கல்லூரியில் இணைந்து படித்து பட்டம் பெற்றவர். பாடகி ஷோபா வீணை இசை கருவியை வாசிப்பதில் முறையான பயிற்சி பெற்றவர் ஆவார். பல மேடைகளில் அவர் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக  "So beautiful , so elegant, just looking like a WOW" வீடியோவை தீபிகா படுகோன் அவர்கள் ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருந்தார், அப்போதில் இருந்து இந்த வீடியோ செம டிரெண்ட் ஆனது, தீபிகா படுகோனின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:

மேலும் படிக்க | புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News