லைஃப் ஆஃப் பழம் - திருச்சிற்றம்பலத்தின் புதிய அப்டேட்

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிளான லைஃப் ஆஃப் பழம் நாளை வெளியாகவிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 26, 2022, 08:58 PM IST
  • மித்ரன் திருச்ச்சிற்றம்பலம் படத்தை இயக்கியுள்ளார்.
  • அனிருத் படத்துக்கு இசைஅயமித்திருக்கிறார்
  • மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது
 லைஃப் ஆஃப் பழம் - திருச்சிற்றம்பலத்தின் புதிய அப்டேட் title=

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் மித்ரன் ஜவஹர். இவர் தற்போது தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். தனுஷுடன், இயக்குநர் பாரதிராஜா, நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ்,ள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | போனி கபூர் தயாரிப்பில் ரஜினி... சந்திப்பின் பின்னணி என்ன?

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திர அறிமுகத்தை படக்குழுவினர் செய்தன. ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

இதில் இடம்பெற்றிருக்கும், இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை (27-07-2022) வெளியாகவுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இதற்கு முன்னர் தாய் கெழவி பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நிர்வாணத்தின் எதிரொலி: நடிகர் ரண்வீர் சிங் மீது வழக்கு: முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News