“டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடு!!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Updated: Jan 3, 2018, 07:48 PM IST
“டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடு!!
Pic Courtesy : Twitter

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. 

இந்நிலையில் நாளை “டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.