வீரா சீரியல்: அம்பலமான கண்மணியின் திட்டம்.. அதிரடி முடிவெடுத்த வீரா.. இனிமே ஆட்டம் தான்

Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2024, 04:13 PM IST
வீரா சீரியல்: அம்பலமான கண்மணியின் திட்டம்.. அதிரடி முடிவெடுத்த வீரா.. இனிமே ஆட்டம் தான் title=

Veera TV Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா சவாரிக்கு செல்ல ரவுடிகள் ஆட்டோவில் ஏறி பிரச்சனை செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வீரா ரவுடிகளிடம் சண்டையிட்டு தப்பிக்க முயற்சிக்க ரவுடிகள் இவளை தாக்கி விட்டு தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்ய மாறன் மாஸ் என்ட்ரி கொடுத்து ரௌடிகளை அடித்து ஓட விடுகிறான். 

அதன் பிறகு இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்து விடுகின்றனர், மறுபக்கம் கண்மணியும் ராஜேஷின் அம்மா வடிவும் தனியாக சந்தித்து மாறனுக்கும் வீராவுக்கும் விவாகரத்து வாங்கி வீரா இந்த வீட்டிற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து இந்த என் அண்ணனையும் ராஜேஷையும் கொன்ற இந்த குடும்பத்தில் இருக்கும்  தீர்க்க வேண்டும் என்று தங்களது திட்டத்தை பேசி கொள்ள வள்ளி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். அதோடு இவர்கள் பேசுவதை வீடியோவாகவும் எடுத்து கொள்கிறாள். 

பிறகு அங்கிருந்து வீராவை பார்க்க வந்த வள்ளி கண்மணி திட்டம் குறித்து சொல்ல வீரா அதை நம்ப மறுக்க வள்ளி வீடியோ ஆதாரத்தை காட்ட அதை பார்த்து அதிர்ந்து போகிறாள். இந்த உண்மையை நான் யாரிடமும் சொல்ல போறது இல்ல, அப்படி சொன்னா கண்மணியோட வாழ்க்கையே போய்டும், அவளை நிறுத்தணும். என் குடும்பமும் நல்லபடியா இருக்கணும் அதுக்கு நீ எங்க வீட்டு மருமகளாக வரணும் என்று சொல்கிறாள், இனி முடிவு உன் கையில் என்று சொல்லி போனை கொடுத்து விட்டு கிளம்பி வருகிறாள். 

இதனை தொடர்ந்து நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு வீரா கண்மணி வாழ்க்கையை சரி செய்யவும் ராமசந்திரன் சார் குடும்பத்தை காப்பாற்றவும் முடிவெடுக்கும் வீரா ராமசந்திரன் வீட்டிற்குள் மருமகளாக நுழைய முடிவெடுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - கார்த்திகை தீபம் சீரியல்: உயிருடன் இருக்கும் தீபா.. உண்மையை உடைத்த கீதா, கார்த்தி ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News