விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய்சேதுபதி தளபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அதனுடன் மாஸ்டர் பட அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது படக்குழு.

Last Updated : Feb 29, 2020, 09:04 PM IST
விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! வைரலாகும் புகைப்படம்! title=

நடிகர் விஜய்சேதுபதி தளபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அதனுடன் மாஸ்டர் பட அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று அனிருத் இசையில் விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. 

இந்நிலையில்  இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தனது ஸ்டைலில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தாக கூறி சில தகவல்கள் வெளியானது.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைபடம் இணைதளத்தில் வைரலாகி வருகின்றது. 

 

 

மேலும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Trending News