விஷால் நிறுவனத்தில் ரெய்டு செய்தி வதந்தி - ஜிஎஸ்டி நுண்ணறிவு அதிகாரி

Updated: Oct 23, 2017, 07:13 PM IST
விஷால் நிறுவனத்தில் ரெய்டு செய்தி வதந்தி - ஜிஎஸ்டி நுண்ணறிவு அதிகாரி
Pic Courtesy : ANI

இன்று சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. இன்று மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று சென்னை மண்டல ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இணை அதிகாரி கூறியுள்ளார்.