Cyber Crime: மோசடி ஆசாமிகளிடம் 10 லட்சம் ரூபாயை இழந்த NRI!

வெளிநாடு வாழ் இந்தியரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2023, 06:58 PM IST
  • இரண்டு முறை PIN எண்ணை தவறாக பதிவு செய்ததால், கார்டு முடக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
  • வருமான வரி விவரங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கூறிய மோசடி ஆசாமிகள்.
  • போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Cyber Crime: மோசடி ஆசாமிகளிடம் 10 லட்சம் ரூபாயை இழந்த NRI! title=

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்தவர்கள் பாதிக்கப்பட்ட நபரை அவரது கைபேசியில் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு விவரங்களைப் பெற்று, அவரது கைபேசிக்கு ஃபிஷிங் இணைப்பை அனுப்பி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

பத்ரி நாராயணன் (45) என்ற மென்பொருள் பொறியாளர், விருகம்பாக்கத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க வந்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரான இவர், புதன்கிழமை, விருகம்பாக்கம் அருகே உள்ள ஏடிஎம்மிற்கு சென்ற நாராயணன், இரண்டு முறை PIN எண்ணை தவறாக பதிவு செய்ததால், அவரது கார்டு முடக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வீடு திரும்பிய அவருக்கு, தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அடையாளம் தெரியாத நபர், நாராயணனிடம், தான் சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் பராமரிப்பு பிரிவில் இருந்து வருவதாகவும், அவரது கணக்கு மற்றும் கார்டு விவரங்களையும் கேட்டறிந்தார். வருமான வரி விவரங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் படிக்க | NRI மைனர் பெயரில் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது எப்படி!

நாராயணனின் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால், அவர் உடனடியாக தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். அப்போது அந்த அழைப்பாளர் நாராயணனின் போனுக்கு ஒரு இணைப்பை அனுப்பினார். நாராயணன் லிங்கை கிளிக் செய்ததால், மூன்று தவணைகளில் மொத்தம் 10 லட்சம் அவரது கணக்கில் இருந்து டெபிட் ஆனது. பின்னர் நாராயணன் தனது வங்கிக்கு சென்று பார்த்த போது தான் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.  இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | அமெரிக்காவில் NRI சுட்டுக்கொலை, குடும்பத்தினர் காயம், ஒரே வாரத்தில் 2வது சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News