கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியாலும், விலைவாசி உயர்வாலும் பாதிகப்படுள்ள இலங்கையில் மீண்டும் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்தால் நாளாந்தம் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் விலை அதிகரிப்பை தவிர்க்க வேறு மாற்று வழியில்லை என அவர் தெரிவித்தார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 4,860 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. இது முந்தைய விலையிலிருந்து 2,185 ரூபாய் அதிகரிப்பாகும்.
மேலும் படிக்க | இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல்
அதேபோல், 5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 874 ரூபாயாக இருந்த நிலையில் அதன் புதிய விலை 1,945 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 404 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பினால் இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் மட்டுமல்லாது, ஓட்டல்காரர்கள் பிற வியாபாரிகள் என பலரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இலக்கையில் ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகின்றது. நீண்ட வரிசையில் நின்று தான் மக்கள் சிலிண்டர்களை வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது. இந்த சந்தர்பத்தில் இந்த விலை அதிகரிப்பானது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR