ஊழலுக்கு எதிரான கமலின் 'மையம் விசில் ஆப்' அறிமுகம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஊழலுக்கு எதிரான செயலி வரும், 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Apr 26, 2018, 09:13 AM IST
ஊழலுக்கு எதிரான கமலின் 'மையம் விசில் ஆப்' அறிமுகம்! title=

மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் கட்சியை அறிவிக்கும் முன் 'மையம் விசில் மொபைல் ஆப்' குறித்து பேசியிருந்தார். 

அவர் அறிவித்தபடி, வரும் 30ம் தேதி, முதல் இந்த 'விசில் ஆப்' செயல்பாட்டுக்கு வருகிறது.

இது குறித்து, கமல், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது...!

மக்கள் கைகட்டி அமைதிக் காப்பதுதான் அனைத்திற்குமான பிரச்னை என்றும், அந்த நிலை மாற பிரச்னைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் மய்யம் விசில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது

Trending News