ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்பு

Puducherry Govt Announcement Diwali Bonus: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2024, 04:51 PM IST
ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்பு title=

Puducherry Govt Employees Diwali Bonus: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தீபாவளி போனஸ் அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், புதுச்சேரி அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு இன்று தீபாவளி போனஸ்  அறிவித்துள்ளது. அதாவது புதுசேரியில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்க போகிறது. 

புதுச்சேரி அரசு என்பது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால், மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் யூனியன் பிரதேசமாக புதுவை இருப்பதால், முன்னதாக மத்திய ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அந்த உத்தரவின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் தீபாவளி போனஸ்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது இன்று அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மறுபுறம் அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலை படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். தீபாவளிக்கு முன்னதாக இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 

மாநில அரசு பணியாளர்களுக்கு ஜூன் 1 முதல் (1.7.2024) 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.1931 கோடி கூடுதல் செலவாகும்.

மேலும் படிக்க - தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு

மேலும் படிக்க - தீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதி

மேலும் படிக்க - தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு, யாருக்கு எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News