சேலம் to சென்னை: சேலத்தில் இன்று முதல் விமான சேவை!

சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை - சேலம் விமான சேவை இன்று துவங்க உள்ளது.

Last Updated : Mar 25, 2018, 09:58 AM IST
சேலம் to சென்னை: சேலத்தில் இன்று முதல் விமான சேவை! title=

சேலம்: சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை - சேலம் விமான சேவை இன்று துவங்க உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் இந்த புதிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான போக்குவரத்து சேவையின் துவக்க விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

இந்த விமான சேவை துவக்க விழாவானது காலை 11 மணிக்கு நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விமான சேவையை டில்லி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, வீடியோ கான்பிரன்சிங் மூலம் விமான சேவையை துவங்கி வைக்க்கிறார். சேலத்தில் நடைபெறும் விழாவை முதல்வர் பழனிசாமி குத்து விளக்கேற்றி துவக்கி உள்ளார். 

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ட்ரூ ஜெட் நிறுவன இயக்குனர் பிரேம்குமார் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விமான சேவை தொடங்க உள்ளதை அடுத்து நேற்று விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் செயல்படுவது குறித்து செயல் விளக்க ஒத்திகையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

Trending News