தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18-ம் தேதி நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவியை ஆஜர்படுத்தினர். மேலும் நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி அதிகாரிகள் கோரினர்.
இதனையடுத்து, நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.