இரத்தக்களரி சண்டை.. மலைப்பாம்பு vs கொமோடோ டிராகன்: நடுங்க வைக்கும் வீடியோ

python and komodo dragon fight video: மலைப்பாம்பு மற்றும் கொமோடோ டிராகன் இடையில் நடக்கும் கொடூரமான சண்டையிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 2, 2023, 12:58 PM IST
  • பெரிய மலைப்பாம்புக்கும் உடும்புக்கும் இடையே சண்டை.
  • மலைப்பாம்பு மற்றும் கொமோடோ டிராகன் தாக்குதல்.
  • கொமோடோ டிராகன் மலைப்பாம்பை மெல்ல ஆரம்பித்தது
இரத்தக்களரி சண்டை.. மலைப்பாம்பு vs கொமோடோ டிராகன்: நடுங்க வைக்கும் வீடியோ title=

மலைப்பாம்பு கொமோடோ டிராகன் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான மற்றும் வினோதமான விஷயங்களால் நிரம்பியிருக்கிறது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்க முடியும். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில நேரம் புன்னகைக்க வைக்கின்றன, சில நேரம் யோசிக்க வைக்கின்றன, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில நேரம்அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில நேரம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெரிய மலைப்பாம்புக்கும் உடும்புக்கும் இடையே நடக்கும் சண்டை பற்றி தான் காண உள்ளோம். 

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

மலைப்பாம்பு உலகின் மிக ஆபத்தான வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது வேட்டையாடும் தன் இரையை கடித்து திங்காமல் அப்படியே உயிருடன் விழுங்கும். மறுபுறம் பெரிய பல்லி, உடும்பு அதாவது கொமோடோ டிராகனும் மிகவும் ஆபத்தான வேட்டையாடும் ஒரு விலங்காகும். இன்று நாம் இந்த விலங்குகள் தொடர்பான வீடியோவை தான் இங்கு காண உள்ளோம்.

மலைப்பாம்பு மற்றும் கொமோடோ டிராகன் தாக்குதல்
இந்த நிலையில் இந்த வலிமைமிக்க விலங்குகள் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சியை தான் காண உள்ளோம். இந்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவில், கொமோடோ டிராகனுடன் நேருக்கு நேர் மலைப்பாம்பு வருகிறது. இங்கே கொமோடோ டிராகன் தன் இரையை தேடி அலைகிறது, அதேபோல் மலைப்பாம்பும் தன் இரையை தேடி அலைகிறது. அப்போது பெரிய உடும்பை பார்த்த மலைப்பாம்பு சற்றும் யோசிக்காமல், தாமதம் செய்யாமல் உடனடியாக தாக்குகிறது. இதற்குப் பிறகு நடந்ததை வீடியோவில் முழுமையாக கண்டால் நீங்கள் பதபதைத்து விடுகிறது. மேலும் இந்த இரண்டு விலங்குகளும் ஒருவர் தாக்கிக்கொண்டதை சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் காணலாம்.

கொமோடோ டிராகன் மலைப்பாம்பை மெல்ல ஆரம்பித்தது
கொமோடோ டிராகனின் பின் பகுதியை வாயில் பிடித்து மெல்ல ஆரம்பித்ததைக் காணலாம். இங்கே நாகம் மீண்டும் தன் வலிமையைக் காட்டி கொமோடோ டிராகனைத் தாக்கியது. வீடியோவில் இது போன்ற ஒரு காட்சி உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு விலங்குகளுக்கும் இடையே நீண்ட நேரம் போர் நடந்தது, ஆனால் இறுதியில் யாரும் வெற்றிபெறவில்லை.

கொமோடோ டிராகன் மலைப்பாம்பு சண்டையிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:

கொமோடோ டிராகன் மற்றும் மலைப்பாம்பு சண்டை தொடர்பான இந்த ஆபத்தான வீடியோ சமூக ஊடகங்களின் வெவ்வேறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இனஸ்டாகிராமின் @natureismetales என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News