முத்தமா குடுக்கற, இந்தா வாங்கிக்கோ: கிஸ் கொடுத்த இளைஞனை வெச்சி செஞ்ச பாம்பு, வைரல் வீடியோ

Scary Snake Video: முத்தம் கொடுக்க ஆசை இருந்தால், அதை பாம்புக்கா கொடுப்பது? கடுப்பாகி பாம்பு செய்த வேலை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2023, 03:25 PM IST
  • பாம்பை பார்த்தால் நம்மில் பெரும்பாலானோர் அங்கிருந்து பாய்ச்சல் எடுப்போம்.
  • ஆனால், பாம்புகளைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலரும் உள்ளனர்.
  • அச்சப்படாவிட்டால் பரவாயில்லை, ஆனால், தேவை இல்லாமல் அதை சீண்டினால், அதற்கான பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
முத்தமா குடுக்கற, இந்தா வாங்கிக்கோ: கிஸ் கொடுத்த இளைஞனை வெச்சி செஞ்ச பாம்பு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்பை பார்த்தால் நம்மில் பெரும்பாலானோர் அங்கிருந்து பாய்ச்சல் எடுப்போம். ஆனால், பாம்புகளைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலரும் உள்ளனர். அச்சப்படாவிட்டால் பரவாயில்லை, ஆனால், தேவை இல்லாமல் அதை சீண்டினால், அதற்கான பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும். இதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒரு இளைஞன் ஒரு நாகப்பாம்பைப் பிடித்துக் கொண்டு அதை முத்தமிட முயற்சிக்கிறார். ஆனால் அவரது செயல் பிடிக்காத பாம்பு அந்த இடத்திலேயே அவருக்கு பதிலடி கொடுக்கிறது. 

முத்தத்துக்கு பாம்பு கொடுத்த பதிலடி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு இளைஞன் முதலில் பாம்பை பிடிக்க முயன்று அதில் வெற்றி பெறுவதை காண முடிகின்றது. ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் பாம்புக்கு முத்தமிடத் தொடங்குகிறார். ஆனால் இது பிடிக்காத பாம்பு, இங்கு தனது உக்கிரமான வடிவத்தைக் காட்டி, அந்த இளைஞனின் வாயைக் கொத்தி விடுகிறது. அவர் அங்கேயே விழுகிறார். பாம்பும் அவர் கையை விட்டு விலகி அங்கிருந்து செல்கிறது. அப்போதும் விடாமல் அங்கிருந்த மற்றவர்கள் அதைத் தொடர்வதை வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: குட்டிகளை காக்க முள்ளம்பன்றிகள் சிறுத்தையுடன் நடத்தும் போராட்டம்!

கிஸ் கொடுத்த இளைஞனுக்கு பாம்பு கொடுத்த பதிலை இங்கே காணலாம்: 

பாம்புக்கு கிஸ் கொடுத்த இளைஞனை பாம்பு கொத்தியவுடன் அந்த இடத்தில் இருந்த பலர் அவரை நோக்கி ஓடி வந்தனர். எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றை காரணம் இல்லாமல் சீண்டினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிதான் வரும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாகும். 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @reportersfact என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ஆப்பிள் சாப்பிட்டு கடுப்பேத்திய குரங்கு: தோஸ்த் குரங்கின் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News